நான்தான் ஜிஓ போட்டேன்.. ஆனா அதுக்கு அப்பறம் நடந்ததை பாருங்க! எடப்பாடி சொன்ன வார்த்தை! கவனிச்சீங்களா
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என கூறிய கட்சி பா.ஜ.க., அந்த கட்சியோடு பா.ம.க. எப்படி கூட்டணி வைத்தது? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று அரக்கோணத்தில் அதிமுக பொதுசெயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

அதில், பொய் வழக்குகள் போட்டு நேரத்தை வீணடிக்காமல், ஒரு நிமிடம் ஆட்சியில் இருந்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்குகிறார்கள் என்று கூறும் ஸ்டாலின் சூதாட்டம் நடத்தும் ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடமிருந்து 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாங்கியது ஏன்?
மக்கள் கேட்கிறார்கள் பதில் கூறுங்கள் ஸ்டாலின் அவர்களே.. நாங்கள் ஏன் பாஜகவை எதிர்க்கவில்லை.. நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். நாங்களா ஆளுங்கட்சியாக இருக்குறோம்? எதிர்க்கட்சியாக இருக்கும் எங்களால் எப்படி மோடியை எதிர்க்க முடியும். நீங்கள்தான் எதிர்க்க வேண்டும். நாங்கள் பா.ஜ.க. கூட்டணியை முறித்ததால் உங்களுக்கு ஏன்? பயம் வருகிறது;
எந்த கொம்பனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இரட்டை இலை சின்னத்தை தொட்டு கூட பார்க்க முடியாது. இது தெய்வத்தால் உருவாக்கப்பட்ட சின்னம்.. தெய்வ சக்தி பெற்ற சின்னம். அதை யாராலும் அழிக்கவே முடியாது. பெண்களை மதிக்கின்ற கட்சி அதிமுக தான். பெண்களை இழிபு படுத்து பேசுகிற கட்சி தான் திமுக. மக்களை சந்திக்காத பொம்மை முதல்வர். தேர்தலின் போது தான் முதல்வர் ஸ்டாலின் டீக்கடையை பார்க்கிறார். கும்பகர்ணன் தூக்கத்தில் இருக்கும் முதல்வர் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலினை போல் முதல்வராக இருந்துகொண்டு இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய எந்த திட்டமாவது தமிழகத்தில் அமல்படுத்த முற்பட்டால் யாராக இருந்தாலும் எதிர்த்து கண்டிப்பாக குரல் கொடுப்போம். உதாரணத்திற்கு காவிரி நதி நீர் பிரச்சினை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி பாஜக அரசு நடக்கவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என கூறிய கட்சி பா.ஜ.க., அந்த கட்சியோடு பா.ம.க. எப்படி கூட்டணி வைத்தது? ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை பிறப்பித்தது நான்தான்; ஆனால், தி.மு.க. அரசு கண்டுகொள்ளாததால் காலாவதியாகிவிட்டது. நான்தான் ஜிஓ போட்டேன். ஆனால் பாமக என்னவோ பாஜகவோடு போய்விட்டது.
காவிரி நதி நீர் பிரச்சினை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி பாஜக அரசு நடக்கவில்லை. தனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மத்திய பாஜக அரசை எத்தனையோ முறை சொல்லி பார்த்தோம். அவர்கள் அமல்படுத்தப்படவிலை. இதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தோம். 22 நாட்கள் நாடாளுமன்றம் நடக்கவில்லை. இது அதிமுகவின் வலிமையை காட்டுகிறது.
அழுத்தம் கொடுத்தோம்.. இதனால் மத்திய பாஜக அரசு பணிந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. இது தாங்க அதிமுகவின் சாதனை..
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications