எடப்பாடி பழனிசாமி சுருக்! எல்லாம் நீங்க பார்த்த வேலை! வேலுமணி பக்கம் பந்தை திருப்பி! தகிக்கும் சேலம்
சென்னை: சேலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் எடப்பாடி பழனிச்சாமி காட்டிய மெல்லிய கோபம் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. "நீங்கள் சொன்ன நபர்களுக்குத்தான் சீட் கொடுத்தேன், அவர்கள் தோற்றால் நீங்கள்தான் முழு பொறுப்பு" என எடப்பாடி போட்ட கண்டிஷனால் வேலுமணி கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம்.. எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து எடப்பாடி பேசிய விஷயங்கள் இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.. இதை பற்றின பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை தங்கமணி, எஸ்.பி.வேலு மணி மற்றும் கொங்கு மண்டல நிர்வாகிகள் என 20-க்கும் மேற்பட்டோர் சந்தித்துள்ளனர். எக்ஸிட் போல் குறித்து இவர்களும் விவாதித்துள்ளனர். அவர்களிடம், அதிமுக ஆட்சி அமையும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை
அதேசமயம், கொங்கு மண்டலம், டெல்டா மண்டலம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, எஸ்.பி.வேலுமணியைப் பார்த்து, இந்த மண்டலங்களில் அதிமுகவில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் நீங்கள் சொல்லித்தான் போட்டிருக்கிறேன். என்னுடைய வேட்பாளர்கள் கிடையாது.
நான் யாரை செலக்ட் பண்ணி வைத்திருந்தேன் என உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் தவிர்த்து, நீங்கள் (வேலுமணி) சொல்லித்தான் வேட்பாளர்களை மாற்றி நீங்கள் சொன்ன நபர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. அவர்கள் தோல்வி அடைந்தால், அதற்கு முழு பொறுப்பும் நீங்கள் தான் ஏற்கவேண்டும் என்று மெலிதாக ஒரு கோபத்துடன் சொன்னாராம் எடப்பாடி பழனிச்சாமி.
கொங்கு + கவுண்டர் சமூகம்
அதற்கு வேலுமணி, "அப்படியெல்லாம் நடக்காது அண்ணே.. நிச்சயம் நாம் ஜெயிப்போம்" என்று சந்தேகத்துடன் இழுத்தபடியே சொல்லியிருக்கிறார் வேலுமணி.
உடனே எடப்பாடி, "கடந்த 2021 தேர்தலில் கொங்கு மண்டலமும், வடக்கு மண்டலமும் தான் நமக்கு கைக்கொடுத்தது. இந்த இரண்டு மண்டலங்களும் என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருந்தவை. அதாவது, கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகமும், வன்னியர் சமூகமும் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டங்களில் நாம் வெற்றிப் பெற்றோம்.
பந்தை வேலுமணி பக்கம் தள்ளிய எடப்பாடி
இதே அளவுக்கு, முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ள தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓபிஎஸ் கடுமையாக உழைத்து அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை வாங்கிக் கொடுத்திருந்தால். நமது ஆட்சியை நாம் தக்க வைத்து கொண்டிருப்போம். திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.
அதைத்தான் இன்றைக்கும் சொல்கிறேன்...நீங்கள் பொறுப்பேத்துக் கொண்ட மண்டலங்களில் வெற்றியை பெற்றுத்தர உழைத்தீர்ப்பீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை தோல்வி அடைந்தால், நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பந்தை வேலுமணி பக்கம் தள்ளி விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.
திக் பிரமையில் வேலுமணி?
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திடீர் அதிரடியால் எஸ்.பி.வேலுமணி கடும் திக் பிரமையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.. தேர்தல் முடிவுகள் வரப்போகும் நிலையில், சேலத்தில் நடந்த இந்தச் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிரடி நிபந்தனை, எஸ்.பி.வேலுமணிக்கு மட்டுமல்லாமல் மற்ற முக்கிய நிர்வாகிகளுக்கும் ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்தத் தருணத்தில், எடப்பாடியின் இந்த 'பொறுப்பு' கணக்கு வேலுமணிக்கு கைகொடுக்குமா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்..!!
- எழில்












Click it and Unblock the Notifications