ஜெயலலிதாவின் கனவுத் திட்டம்! அம்மா உணவகங்களை மூட முயற்சி! தமிழக அரசு மீது எடப்பாடி பாய்ச்சல்!
சென்னை: விஞ்ஞான முறையில் திமுக அரசு அம்மா உணவகங்களை மூட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அம்மா அவர்கள் 2013-ஆம் ஆண்டு அம்மா உணவகங்களை துவங்கினார். மக்களுடைய ஏகோபித்த ஆதரவின் காரணமாக இந்த உணவகங்கள் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சில பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.

சென்னையில் ஒரு வார்டுக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் 200 வார்டுகளிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டு இட்லி, பொங்கல், கலவை சாதங்கள், சப்பாத்தி போன்ற உணவு வகைகள் மலிவு விலையில் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பசிப் பிணியை தீர்த்துக்கொண்டனர்.
மாண்புமிகு அம்மாவின் அரசு இருந்தவரை, அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவும்; சமையலுக்குத் தேவையான காய்கறிகள் கூட்டுறவு பண்டக சாலைகளில் இருந்தும் வழங்கப்பட்டு வந்தது. 'அம்மா' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியதுபோல் பதறும் இந்த விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கி, படிப்படியாக மூடுவிழா நடத்தி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக இருந்த அம்மா உணவகங்கள் தற்போது பகுதியளவு மட்டுமே செயல்படுகிறது உணவுப் பொருட்கள் வழங்குவது 90 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது.பல இடங்களில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வேலை செய்யவில்லை; குளிர்சாதனப் பெட்டி (Fridge) பழுதடைந்துள்ளது.குடிநீர் முழுமையாக வழங்கப்படுவதில்லை. உதாரணமாக, சென்னை, ராயப்பேட்டை பாரதி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் இருக்கும் குடிநீர் தொட்டி இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது.
பல அம்மா உணவகங்களின் மேற்கூரைகள் சரியில்லை என்று காரணம் காட்டி மூடப்படுகிறது. ஒருசில உணவகங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றமடிக்க. பல இடங்களில் மின் விசிறி காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது
பெரும்பாலான உணவகங்களில் உணவு சாப்பிடும் மேஜை / மேடையின் கால்கள் உடைந்துள்ளதால் சாப்பிட வரும் ஒருசிலரும் தட்டை கையில் ஏந்தி சாப்பிடுகின்றனர்.மேற்சொன்ன அனைத்தும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். சாப்பிடச் செல்லும் மக்கள் 2021-க்கு முன்பு இருந்த அம்மா உணவகங்களையும், அதன் தற்போதைய நிலையையும் கண்ணீருடன் ஒப்பிடுகின்றனர்.
அம்மா உணவகங்களை மூடும் படுபாதகமான செயலை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டியிலும், அறிக்கைகள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தொடர்ந்து இந்த விடியா அரசு பணியாளர்களைக் குறைத்தும், தரமற்ற பொருட்களைவழங்குவதாலும், தரமான உணவு வகைகளை தயாரித்து வழங்க முடியவில்லை. மேலும், பழுதடைந்த மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டி, உணவுப் பாத்திரங்கள் போன்றவற்றை சரிசெய்யாததாலும், கட்டட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும் அம்மா உணவகங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன.
எனவே, அம்மாவின் அரசில் ஏழை, எளிய மற்றும் தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை முழுமையாகப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி என்ற பெருமையைப் பெற்ற விடியா திமுக அரசு குறைந்த அளவு நிதியை ஒதுக்கி, விஞ்ஞான முறையில் அம்மா உணவகங்களை மூட முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications