Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் வெடித்த மோதல்: என்னை குற்றவாளியாக்க சதியா? ஓ.பி.எஸ் மீது இ.பி.எஸ் கடும் கோபம்- பரபர அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவில் இரட்டை தலைமைகளுக்கு இடையே மீண்டும் மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அனைத்தும், அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் என்னை குற்றவாளியாக நிறுத்த வைக்கும் சதிதான் என மாஜி அமைச்சர்களிடம் குமுறி இருக்கிறார் மற்றொரு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சட்டசபை தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக் கொண்டு ஆளுக்கொரு திசையில் பயணித்தனர். இருவருமே தங்களது செல்வாக்கைக் காட்ட ஊடகங்களில் பிரமாண்டமாக விளம்பரம் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதை ஓ.பன்னீர்செல்வம் தொடக்கம் முதலே ரசிக்காததுதான் இதன் பின்னணி. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் அதிமுகவின் இரு தலைவர்களும் திசைக்கு ஒருபக்கமாக பேசினர்.

ஓ.பி.எஸ்.தரப்பு பொறுமை

ஓ.பி.எஸ்.தரப்பு பொறுமை

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை அதிமுக தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்கிற கோதாவில்தான் இன்னமும் வலம் வருகிறார். சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடங்கி சசிகலா விவகாரம் வரைக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எல்லாமே பின்னடைவுதான். அதிமுகவில் நெம்பர் 2-தான் ஓ.பன்னீர்செல்வம் என்பதை தமது வியூகங்களால் நிலை நிறுத்திவைத்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சற்று அமைதி காத்தது.

இபிஎஸ் மீது பகிரங்க பாய்ச்சல்

இபிஎஸ் மீது பகிரங்க பாய்ச்சல்

ஆனால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது மீண்டும் ஆக்ரோஷத்தையும் அதிருப்தியையும் கொட்டினார் ஓ.பன்னீர்செல்வம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சிக்கு எதிராக பேசிக் கொண்டே வந்தார். திடீரென சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றுப் போனதற்கு காரணமே நாம் அப்போது மேற்கொண்ட வியூகங்கள்தான் என ஒரே போடாகப் போட்டார். இதனால் அதிமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஆடிப் போயினர். இதே கருத்தை மீண்டும் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு ரொம்பவே ஆடியும் போனது.

குற்றவாளியாக்க சதியா?

குற்றவாளியாக்க சதியா?

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு தொடர்பாக மாஜி அமைச்சர்களுடன் விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும், அவர் (ஓ.பன்னீர்செல்வம்) ஏன் அப்படி பேச வேண்டும் ? அவருடன் இணைந்துதானே அனைத்து முடிவுகளையுமே எடுத்தோம் என்று எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டிருக்கிறாராம். அத்துடன் அன்று எல்லோரும் சேர்ந்து முடிவுகளை எடுத்து விட்டு இன்று கட்சிக்காரர்கள் முன்னால் என்னை மட்டும் குற்றவாளியாக நிறுத்த சதி செய்கிறாரா அவரு? எனவும் ஆவேசப்பட்டாராம் எடப்பாடி பழனிசாமி. இந்த மந்திராலோசனை கூட்டம் குறித்து அகமகிழ்ந்து போனதாம் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு.

ஏன் அடிவயிறு கலங்குது?

ஏன் அடிவயிறு கலங்குது?

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் நாம் பேசிய போது, தேர்தலின் போது எப்படி எல்லாம் தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார் என்பது ஊர் உலகத்துக்கே தெரியும். அப்பவே சசிகலா, தினகரனை சேர்க்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். பிடிவாதம் காட்டினாராம். ஆனால் அவங்களுக்கு எங்க செல்வாக்கு இருக்கு? இரட்டை இலைக்குதானே செல்வாக்கு.. அது நம்மகிட்ட இருக்கு..அது போதும் என எகத்தாளமாக சொன்னவர்தானே எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமல்ல வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு என தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்து தென்மாவட்டத்தில் யாரும் ஜெயிக்காத வகையில் பார்த்துக் கொண்டது எவ்வளவு பெரிய குற்றம்? கொங்கு மண்டலத்தில் அந்த ஒரு மாஜி அமைச்சர் வசமே வேட்பாளர்களை தேர்வை ஒப்படைத்தது எவ்வளவு பெரிய குற்றம்? என்றெல்லாம் பட்டியல் போடுகின்றனர். இதையெல்லாம் பகிரங்கமாகவா சொன்னார்.. இல்லையே.. பொதுவாக வியூகம் தோற்றது எனில் மடியில் கனமிருப்பவர்களுக்குத்தானே அடிவயிறு கலங்கும் என்றும் கலாய்க்கின்றது ஓபிஎஸ் தரப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+