ஒரு முறை முடிவு செஞ்சுட்டா திடமா இருப்பேன்.. நியாயமா இருக்கும்..இபிஎஸ் பஞ்ச் பதிலடி 'அவங்களுக்கா?'
சென்னை: தாம் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதில் திடமாக இருப்பேன்; அந்த முடிவு நியாயமாக இருக்கும் என அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியிருப்பது விவாதத்க்குரியதாகி இருக்கிறது.
அதிமுகவானது ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என மூன்று கோஷ்டிகளாக பிரிந்து நிற்கிறது. அதிமுக தொண்டர்களுடன் அமமுக என டிடிவி தினகரன் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.
அதிமுகவை தம் பிடியில் வைத்திருக்கும் பாஜக, 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களுடன் பணிகளை தொடங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக அதிமுகவை ஒருங்கிணைத்து வலிமையான கட்சியாக மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

ஓபிஎஸ் எதிர்ப்பில் உறுதி
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓபிஎஸ் ஒரு துரோகி, அவரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே மாட்டோம்; அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயார் என்கிற மனநிலையில் மிக உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவுடன் மோதுகிற நிலைமைக்கும் கூட இபிஎஸ் தரப்பு தயாராகவே நிற்கிறது. அத்துடன் தங்களது தலைமையிலான அதிமுகவுடன் ஒரு மெகா கூட்டணிக்கான முயற்சிகளையும் இபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது.

பாஜக பரிதவிப்பு
ஆனால் பாஜகவோ, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தயார் என கூறிக் கொண்டு, எப்படியாவது கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து அதிமுக வலிமையாக வந்துவிடாதா? என காத்திருக்கிறது. இதற்காக அதிமுகவுடன் இணக்கமான போக்கை காட்டியும் வருகிறது. ஆனால் அதிமுக ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் கண்ணுக்கு எட்டிய தொலைவில் இல்லை என்றே சொல்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

மோடி, அமித்ஷா பயணம்
இந்நிலையில் தமிழகம் வருகை தந்தனர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா. பிரதமர் மோடியை ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே இணைந்து வரவேற்றனர். இந்த ஒற்றுமையைத்தான் டெல்லி விரும்புகிறது என்பதையே பிரதமர் மோடி மூலம் பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். ஆனால் இபிஎஸ் தரப்பு இதை ரசிக்கவில்லை. அதனால்தான் அமித்ஷா விழாவுக்கு ஓபிஎஸ் போன நிலையில் இபிஎஸ் போகவில்லை.

இபிஎஸ் பஞ்ச் டயலாக்
இந்த பின்னணியில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது, நான் எப்போதும் திடமான முடிவெடுப்பேன் என கட்டைவிரலை உயர்த்திக் காட்டி அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக கூறினார் இபிஎஸ். அத்துடன் என் முடிவு நியாயமாக இருக்கு9ம்; அதில் உறுதியாக இருப்பேன் எனவும் தெரிவித்தார். இபிஎஸ்-ன் இந்த பதில்கள்தான் இப்போது விவாதிக்கப்படுகிறது. இப்படி அழுத்தம் திருத்தமாக பிரஸ் மீட்டில் இபிஎஸ் சொல்வதே, ஓபிஎஸ் வேண்டாம் என்ற முடிவில் எப்போதும் திடமாக இருப்பேன் என்பதை டெல்லிக்கு பகிரங்கமாக சொல்கிற தொனியாகவும் கூட எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications