முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை! சட்டசபையில் ஓங்கி குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக சட்டசபையில் ஓங்கி குரல் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்தியாவின் தண்டனை சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அமைதியை விரும்பும் யாரும் மாற்று கருத்து கொள்ள மாட்டார்கள். அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசானையை தமிழக அரசு வெயியிட்டு இருந்தது. அதன் பேரில் சிலர் விடுதலையும் செய்யப்பட்டார்கள்.

இதனிடையே முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் நீதிபதி ஆதிநாதன் தலைமையில் தனிக் கமிஷன் அமைத்தது அரசு. இந்நிலையில் அந்த ஆணையத்தை காணவில்லை எனக் குற்றஞ்சாட்டி பரபரப்பை கிளப்பிய மஜக பொதுச்செயலாள தமிமுன் அன்சாரி, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்காக அதிமுக உட்பட சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முறையிட்ட தமிமுன் அன்சாரி தனித் தீர்மானமும் கொண்டு வர வலியுறுத்தினார்.
இதனிடையே முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டசபையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் 36 பேர் 20 முதல் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என்றும் இவர்கள் விடுதலைக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் கடந்த 2021 நவம்பர் மாதம் திமுக அரசு தான் அரசாணை கொண்டு வநந்தாகவும் குற்றஞ்சாட்டினார்.
முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளின் உடல்நிலை, வயது மூப்பு, குடும்ப சூழல், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அவர் கூறியதை போல், சிறுபான்மை சமுதாய மக்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications