Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெய்டை பார்த்து யாருக்கு பயம்.. கண்ணாடியை பார்த்து பேசாதீங்க முதல்வரே.. எடப்பாடி பழனிசாமி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்பார்கள். நடப்பு ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் மே 24ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதற்காக மே 23ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார். இந்த கூட்டத்தை முடித்துவிட்டு மே 24ஆம் தேதி மாலையே தமிழ்நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை சோதனை காரணமாக முதல்வர் டெல்லி பயணிப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

Edappadi Palaniswami reply to Chief Minister MK Stalin regarding the Delhi Trip and Tasmac ED Raid issue

மு.க.ஸ்டாலின் பதில்

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அடித்து சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள் ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற பழனிசாமி, என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாக பேச நா கூசவில்லையா? எந்நாளும் உரிமைக் கொடியை தான் ஏந்துவேன்.. ஊர்ந்து போக மாட்டேன் என்றும் பதில் அளித்தார்.

எடப்பாடி பதிலடி

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதில், முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை.

அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு

உங்கள் குடும்பம் தானே? ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் முதல்வர் மு.க.ஸ்டாலின்? அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

வெள்ளைக் குடை

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை? அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை. ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

பாலியல் சம்பவங்கள்

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை. அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

7.5% இடஒதுக்கீடு

தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை! 7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!

மாநில உரிமை

அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி ஜெயலலிதா வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை! கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!

யார் அந்த தம்பி?

இதற்கெல்லாம் பின்னர் வருவோம்... நான் கேட்ட கேள்வி என்ன? யார் அந்த தம்பி ? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?
டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி கேள்வி

உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன் யார் அந்த தம்பி? என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+