ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. டக்கென கையில் எடுத்த எடப்பாடி.. உண்மையை ஓபனாக சொல்லிட்டாராம்!
சென்னை: ரஜினிகாந்த் பேசியதில் ஒரு விஷயம் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், வெளியில் திமுகவும் பாஜகவும் எதிரி போல் தோற்றம் அளிக்கிறார்கள் ஆனால் உள்ளே உறவு வைத்துள்ளார்கள். ரஜினிகாந்த் இந்த விஷயத்தை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குறித்து தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

ரஜினி பேசிய முக்கியமான விஷயம்: இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், "உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி கலைஞர் போல ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது இல்லை. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து நாணயம் வெளியீட்டு விழாவில் கலைஞர் குறித்து அரை மணி நேரம் பேசியிருக்கிறார் என்று சொன்னால் அது மேலிடத்தின் உத்தரவாகத்தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பேட்டி: இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவரிடம், ரஜினிகாந்த் "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் குறித்து அரை மணி நேரம் பேசியது மேலிடத்தின் உத்தரவாகத்தான் இருக்கும்" என நேற்று பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
ரஜினி போட்டு உடைச்சிட்டாரு: அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "வெளியில் திமுகவும் பாஜகவும் எதிரி போல் தோற்றம் அளிக்கிறார்கள் ஆனால் உள்ளே உறவு வைத்துள்ளார்கள். திமுகவும் பாஜகவும் நாடகம் ஆடுகிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் உண்மையை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். வெளிப்படையாக பாஜக திமுக உறவை சொன்ன ரஜினிகாந்துக்கு நன்றி. திமுக அரசு மீது ஆளுநரிடம் பாஜகவினர் மூன்று முறை ஊழல் பட்டியல் கொடுத்தார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்ணாமலை மீது தாக்கு: அதிமுக ஊழல் ஆட்சி மோசமான ஆட்சி என்றெல்லாம் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அதிமுகவுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்ட போதெல்லாம் இது தெரியவில்லையா? அதிமுக ஆதரவுடன் பல்வேறு மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றிய போதெல்லாம் இது தெரியவில்லையா? எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எங்கள் ஆதரவால் தான் இன்று பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்." எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக












Click it and Unblock the Notifications