ஈபிஎஸ் போடும் ‘சீக்ரெட்’ பிளான்.. கமிஷனுக்கு பிரஷர்.. ‘உள்ளே இழுத்து’.. சீக்கிரம் நடக்குப்போகுதாம்!
சென்னை : தங்களுக்கு சாதகமான விளைவுகளை உறுதி செய்யும் திட்டத்தோடு சீக்ரெட்டாக ஒரு பிளான் போட்டிருக்கிறதாம் எடப்பாடி பழனிசாமி டீம். உயர் நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் தேர்தல் ஆணையத்தை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சி நடக்கிறதாம்.
நீதிமன்றத்தில் மாறி மாறி தீர்ப்புகள் வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தனக்குச் சாதகமான பலனைப் பெறுவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன.
அதிமுக விவகாரம் முற்றுப்பெறாமல் நீண்டு வரும் நிலையில், இதற்கான இறுதிப் புள்ளியை வைக்கப்போவது தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணைய முடிவே பிரதானமாக பார்க்கப்படும்.
இந்நிலையில் தான், தேர்தல் ஆணையத்தில் விரைவாக தங்களுக்கு சாதகமான பலனைப் பெறுவதற்கான காய்நகர்த்தல்களில் ஈபிஎஸ் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முடிவெடுக்காத தேர்தல் ஆணையம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியதும் செல்லும் என்பதில் ஈபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது. பொதுக்குழு தீர்மான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளார் ஈபிஎஸ். ஆனால், தேர்தல் ஆணையம் அதன் மீது இதுவரை முடிவெடுக்கவில்லை.

டெல்லி ஆதரவு
ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்பதில் ஓபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது. அந்த பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த பிறகு, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள ஓபிஎஸ், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். தனக்கு டெல்லியின் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, டெல்லியின் உதவியைப் பெறும் வகையில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஓபிஎஸ்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தான் அதிமுகவில் உச்ச அதிகாரத்தை கொண்டுள்ளனர். ஜூலை 11 பொதுக்குழு செல்லும், அதன் தீர்மானங்கள் செல்லும் என்றால், எடப்பாடி பழனிசாமி அதிகாரம் பெற்றவராக மாறி விடுவார். இல்லையென்றால் பழைய நிலைப்படி ஓபிஎஸ் - ஈபிஎஸ் சம அதிகாரம் படைத்தவர்கள். இதனால், தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதைப் பொறுத்தே இந்த வழக்கின் திசை தீர்மானிக்கப்படும்.

எடப்பாடி கணக்கு
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுவிட விடவேண்டும், அதன் மூலம் தீர்ப்பை எளிதாக தம் பக்கம் திருப்பி விடலாம், அதிமுகவை முழுமையாக கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிடலாம் என ஈபிஎஸ் கணக்கு போட்டிருக்கிறாராம். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெல்லியில் கடுமையாக முயன்று சில சாதகமான விஷயங்களை நோக்கி காய் நகர்த்தியுள்ளனர் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

சீக்ரெட் பிளான்
அதாவது, உயர் நீதிமன்றத்தில் வரும் அதிமுக தொடர்புடைய வழக்கு ஒன்றில், தேர்தல் ஆணையத்தை ஒரு வாதியாகச் சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமான விஷயங்களை தேர்தல் கமிஷன் தரப்பாக முன்வைப்பார் என்றும், அதன் மூலம் நீதிமன்ற உத்தரவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக கிடைக்கும் என்றும் ஈபிஎஸ் டீம் ஒரு சீக்ரெட் திட்டத்தைத் தீட்டியுள்ளதாம்.

வாதி - தேர்தல் கமிஷன்
உயர் நீதிமன்ற வழக்கில் தேர்தல் ஆணையம் முன்வைக்கும் வாதத்தையே திரியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறுவது என எடப்பாடி பழனிசாமி பிளான் போட்டிருக்கிறாராம். அதாவது உயர் நீதிமன்றம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து தனக்கு சாதகமான முடிவைப் பெற்று, அதிமுகவைக் கைப்பற்ற ஈபிஎஸ் முயற்சித்து வருகிறாராம்.

திட்டங்களில் ஒன்று
எடப்பாடி பழனிசாமி டீமின் டெல்லி பயணத்தின் முக்கிய நோக்கங்களில் இதுவும் ஒன்று என்று கிசுகிசுக்கிறது நெருக்கமான வட்டாரம். இந்த திட்டப்படி விரைவில், உயர் நீதிமன்ற வழக்கிற்குள் தேர்தல் ஆணையம் கொண்டு வரப்படும் என்கிறார்கள். இதற்காக டெல்லியின் முக்கிய புள்ளிகளிடம் ஏற்கனவே பேசி திட்டங்களை தயார் செய்துவிட்டதாகவும் ஒரு 'சிக்னல்' காட்டவே ஈபிஎஸ்ஸின் இந்த டெல்லி பயணம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications