அதிமுகவை அலறவிடும் 3 வழக்குகள்: சசிகலா, ஓபிஎஸ்ஸை வீழ்த்தி பொதுச் செயலாளராக கரைசேருவாரா இபிஎஸ்?
அதிமுகவில் மொத்தம் 3 வழக்குகள் இடியாப்ப சிக்கலாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு எதிரான ஓபிஎஸ் அணியின் வழக்கு விடுமுறை நாளான இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலை நடத்தலாம்- தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதிமுகவைப் பொறுத்தவரை மொத்தம் 3 வழக்குகள் இன்னமும் தீர்க்கப்படாதவையாக இருந்து வருகின்றன.

வழக்கு எண்: 1
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சசிகலா சிறைக்கு போக நேரிட்டது. அப்போது அதிமுக அதிருப்தி அணியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைந்து கொண்டது. இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதிமுகவில் புதியதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. 2017 செப்டம்பரில் தம்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சசிகலாவின் இந்த மனுவை நிராகரிக்க கோரி இபிஎஸ் தரப்பில் செம்மலை ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் செம்மலையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் முன்னதாகவே கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறார் சசிகலா.

வழக்கு எண்: 2
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி ஒரு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று பின்னர் உச்சநீதிமன்றத்துக்கு போனது. அண்மையில் உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதாவது ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் சட்டப்படியானது செல்லும்; ஆனால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர முடியும் என்றது. இதனடிப்படையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைதான் நடைபெற்றது.
வழக்கு எண்: 3
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது. இதற்கான வேட்புமனுக்களும் பெறப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மீண்டும் புதியதாக ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் விசாரணை நடத்தப்பட்டது. இன்றைய விசாரணையின் முடிவில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்- தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். இந்த 3 வழக்குகளிலும் வென்றால்தான் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி கரை சேர முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications