குலவிளக்கு திட்டத்தை காப்பி அடித்தோமா? அதிமுக தேர்தல் அறிக்கையை காட்டி எடப்பாடி பழனிசாமி பதிலடி!
சென்னை: தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடிக்க வேண்டிய அவசயமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2021 சட்டசபைத் தேர்தலின் போதே குலவிளக்கு திட்டத்தை நாங்கள் அறிவித்தோம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே இலவச லேப்டாப் திட்டத்தை திமுக செயல்படுத்தி இருப்பதாகவும் விஅம்ர்சித்தார்.
தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கறிக்கோழி பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான பதில் தயாராகி வருகிறது.

சபாநாயகர் கூறிய பின்னரும் பிரச்சனை எழுப்புவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். இதனை ஏற்காத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் முக்கிய பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது.
5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. ஜீரோ நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது.
6 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இது 5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாகும். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிவிட்டு தமிழக அரசு பின்வாங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசயமில்லை.
மகளிருக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021 சட்டசபைத் தேர்தலின் போதே அறிவித்தோம். ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும். மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை திமுகவே நிறுத்தி வைத்தது. தற்போது மாணவர்களின் வாக்குகளை பெறவே லேப்டாப்பை கொடுக்கிறது.
தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதேபோல் அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடும் சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.
-
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications