Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛அதிமுகவில் இஸ்லாமியர் வேட்பாளரே இல்லையே’’.. திமுகவில் இருக்கா? நிருபரிடம் எடப்பாடி பதில் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இஸ்லாமியர் வேட்பாளர் இல்லையே என கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் திமுக கொடுத்து இருக்கா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியதோடு, இது தவறான கேள்வி என கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

Edappadi Palaniswami s answer to a journalist who asked if there is no Muslim candidate in AIADMK

அதிமுக கூட்டணியை பொறுத்தமட்டில் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், கடலூர், மத்திய சென்னை, விருதுநகர், தஞ்சாவூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 32 தொகுதிகளில், புதுச்சேரியை சேர்த்தால் 33 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட உள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் நேற்று முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று 2வது கட்டமாக 17 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீபெரும்பதூர் - பிரேம்குமார், வேலூர் - பசுபதி, திருவண்ணாமலை - கலிய பெருமாள், திருச்சி - கருப்பையா, தர்மபுரி - அசோகன், கள்ளக்குறிச்சி - குமரகுரு, திருப்பூர் - அருணாசாலம், நீலகிரி (தனி) - யோகேஷ் தமிழ்செல்வன், கோவை - சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி - அப்புசாமி என்ற கார்த்திகேயன், திருச்சி - கருப்பையா, பெரம்பலூர் - ஏடி சந்திர மோகன், மயிலாடுதுறை - பாபு, சிவகங்கை - மணக்குடி சேகர் தாஸ், தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி, நெல்லை -சிம்லா முத்து சோழன், புதுச்சேரி - தமிழ்வேந்தன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ராணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர்களின் பெயர்களை எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக வாசித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இஸ்லாமியர் வேட்பாளர் ஒருவர் கூட இல்லையே.. சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையா?'' என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை கேட்டவுடன் எடப்பாடி பழனிச்சாமி, ‛‛திமுகவில் இருக்கிறதா? நாங்கள் எஸ்டிபிஐ கட்சிக்கு கொடுத்து உள்ளோம். மேலும் எங்களின் கட்சி என்பது மதரீதியாக நடத்தப்படும் கட்சி அல்ல. நீங்கள் கேட்கும் கேள்வியே தவறானது. இது மதசார்பற்ற நாடு. இந்த நாட்டில் அனைத்து மதமும் சமம். இதனால் அனைத்து மதமும் சமம். இங்கு இந்த சாதி தான் நிற்க வேண்டும். இந்த மதம் தான் நிற்க வேண்டும் என்பது இல்லை.

எங்களின் ஆட்சி மன்ற குழு தேர்வு செய்தவர்களை தான் நாங்கள் வேட்பாளர்களாக அறிவித்துள்ளோம். வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளோம். சாதி, மதத்தால் பிரித்ததால் தான் நாடு குட்டிச்சுவராக மாறிவிட்டது. சாதி, மதத்தை பிரித்து பார்க்கக்கூடாது. மதம் சார்ந்த கேள்விகளை இனி கேட்க வேண்டாம். மதத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்க கூடாது. அதனை முழுவதுமாக அண்ணா திமுக நிராகரிக்கிறது.'' என்றார்.

அதிமுக சார்பில் வரும் லோக்சபா தேர்தலில் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அவர்களின் வேட்பாளர் பட்டியலிலும் இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக அதிமுக தனது கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. அங்கு எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் திமுக தனது கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை வழங்கி உள்ளது. அங்கு தற்போதைய சிட்டிங் எம்பியான நவாஸ் கனி மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+