Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுடன் எடப்பாடி ரகசிய கூட்டணி? அதிமுக தலைமை மாற்றம்? கேசி பழனிசாமி ஸ்கூப்!

Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக 30 முன்னாள் அமைச்சர்களை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி அதிமுகவைப் பயன்படுத்தி வருகிறார் என்று ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை கேசி பழனிசாமி வைத்துள்ளார்.

மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்பார்கள். அதேபோல் தேர்தல் முடிவு வருவதற்குள், அதிமுகவில் கலகம் ஆரம்பமாகிவிட்டது.

KC Palanisamy has said that Edappadi Palaniswami will soon be removed from AIADMK leadership

அதிமுகவை செங்கோட்டையன் உடைத்துவிடுவார் என்பது போன வாரம் வெளியான வதந்தி. இந்த வாரம் வேலுமணி உடைத்துவிடுவார் என்று ஒரு புதிய வதந்தி.

செங்கோட்டையன் கட்சிக்கு விசுவாசியாகக் கடைசி வரை இருப்பேன் என்று போன வாரம் ஒரு பிரஸ் மீட் வைத்தார். இந்த வாரம் எடப்பாடிக்கு விசுவாசியாக இருப்பேன் என்று வேலுமணி ஒரு பிரஸ் மீட் வைக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும் அதிமுகவில் தலைமை மாற்றம் பற்றி ஒரு விவாதம் கிளம்பி உள்ளது. 2026 முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தார்.

KC Palanisamy has said that Edappadi Palaniswami will soon be removed from AIADMK leadership

இப்போது அவர் அதிமுக தலைமை பொறுப்பில் தொடர்வாரா என்று பூதம் கிளம்பி இருக்கிறது. தினமும் அதிமுக பற்றியும் தலைமை மாற்றம் பற்றியும் பலபல செய்திகள்.

இது பற்றி அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. பழனிசாமி அணுக்குண்டு போல வெடித்துத் தள்ளியுள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் எடப்பாடி பழனிசாமியைப் பற்றிப் பொங்கி எழுந்துள்ளார்.

கேசி பழனிசாமி பேசுகையில், “வேலுமணி பல விசயங்களைச் சொல்லி இருக்கிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார். அடுத்து 2026இல் 200 தொகுதிகள் வரை அதிமுகவை வெற்றி பெறச் செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்றும் சொல்லி இருக்கிறார்.

KC Palanisamy has said that Edappadi Palaniswami will soon be removed from AIADMK leadership

எடப்பாடி பழனிசாமி திடீரென்று , 'வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்குகள் காணாமல் போய்விட்டன’ என்று செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்திருக்கிறார். தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து 1 மாதக் காலம் ஆகிறது. இதைப் புரிந்து கொள்ளவே இவருக்கு 1 மாதம் தேவைப்பட்டிருக்கிறது.
இதுதான் தற்போதைய அதிமுகவின் நிலை. இந்தத் தேர்தலில் குறைந்தது 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அந்தக் கட்சி உறுதி செய்துவிடும்.

ஒருவேளை 2 முதல் 5 இடங்களில் வெற்றி பெற்று, 25% வாக்குகளை வாங்கினால், ஒன்றுபட்ட அதிமுகவுக்கான தேவை ஏற்பட்டுவிடும். அதை அதிமுக தொண்டர்களும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் வலியுறுத்துவார்கள்.

அதையும் தாண்டி பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெற்றிபெற்றுவிட்டால், அதிமுகவில் தலைமை மாற்றம் என்பதைத் தவிர்க்கவே முடியாது. கலகம் ஏற்பட்டுவிடும்.

இதை எல்லாம் உணர்ந்துதான் எடப்பாடி பழனிசாமி இப்போது வாக்குகளைக் காணவில்லை என்று எச்சரிக்கை உணர்வோடு ஒரு பேட்டியைக் கொடுத்து வைக்கிறார். நாளை தோல்வி அடைந்தால், அதைக் காரணம் காட்டிவிடலாம் என்று கனவு காண்கிறார்.

KC Palanisamy has said that Edappadi Palaniswami will soon be removed from AIADMK leadership

செங்கோட்டையனும் வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை ஏற்றுக் கொண்டல் போதுமா? தமிழக மக்கள் அவரை ஏற்றுக் கொண்டு வாக்களித்தால் தான் அவர் கட்சித் தலைமையில் நீடிக்க முடியும்? மக்கள் அங்கீகரிக்கவில்லை என்றால் எடப்பாடி நிலைமை மோசம்தான்.

இதைக் கேள்வி கேட்டால், எடப்பாடியின் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் தேர்தலில் தோற்கவில்லையா? என்கிறார்கள். எம்ஜிஆர் 8 முறை தொடர் தோல்விகளைச் சந்தித்தாரா? அல்லது ஜெயலலிதா சந்தித்தாரா? இவ்வளவு கேவலமாகப் பேச இவர்களால் எப்படி முடிகிறது?

திமுகவுடன் மறைமுகமாகக் கூட்டு வைத்துக் கொண்டு, முன்னாள் அமைச்சர்கள் 30 பேரை வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்தி வருகிறதா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

ஏன் அதிமுக அமைச்சர்கள் மீது ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஸ்டாலின் ஏன் இதுவரை உங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை?

நேரு என்ன ஊழல் செய்கிறார்? துரைமுருகன் என்ன ஊழல் செய்கிறார்? பொன்முடி என்ன ஊழல் செய்து வருகிறார்? இவை எல்லாம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரியாதா? ஏன் திமுக ஊழல்களைப் பற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவு தலைவர்கள் விமர்சித்துப் பேசுவதில்லை? மவுனம் காப்பது ஏன்?

எப்படி திமுகவுடன் அண்டர் கிரவுண்ட் டீலிங் போட்டு கொள்ளை அடிக்கலாம்? வழக்குகள் வராமல் எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்? பாஜகவை விமர்சிக்காமல் கதவைச் சாத்திக் கொண்டு எப்படிப் பாதுகாப்பாக வாழலாம் என்றுதான் எடப்பாடி பழனிசாமியிடம் வேலுமணி உள்ளிட்டவர் கலந்தாலோசிக்கிறார்கள்.

கட்சியை எப்படி வளர்ப்பது? எப்படி அதிக தொகுதிகளில் வெல்வது? இதைப்பற்றி எல்லாம் ஆலோசனை செய்வதைப் போலத் தெரியவே இல்லை.

ஜெயலலிதா மறையும் போது மக்களவை மாநிலங்களைவை என்று 50 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியாக எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைத்தோம்.

இன்றைக்கு எத்தனை எம்பிக்கள் அதிமுகவில் இருக்கிறார்கள்? ஒற்றை தலைமை இருந்தால் வெற்றி பெற்றுவிடுவோம் என்று சொன்னாரே? எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கினாரே? இந்தக் கட்சியை இரண்டாக உடைத்து யார்?

அனைத்தையும் செய்துவிட்டு தோல்விக்கு நான் காரணம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமியால் எப்படிச் சொல்ல முடியும்” என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+