பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளே அதிரடி.. கண்டிப்பு காட்டிய பள்ளிக்கல்வித்துறை.. நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது . 1-5ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்தாலும் கோடை வெயில் இன்னும் முடியவில்லை. தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது.

கேரளாவில் பருவமழை தாமதமாக தொடங்கியதும் கூட வெயில் அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க ஏற்பட்டு உள்ள பருவமழை மாற்றமும் கூட இந்த கடும் வெயிலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.
பள்ளிகள் திறப்பு தேதி: இதையடுத்து கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு இருந்தன. முதலில் பள்ளிகள் திறப்பு தேதி 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை முடிவில் இந்த தேதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. 1-5ம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை எக்காரணம் கொண்டு 6ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட கூடாது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் இதை கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலும் முன்கூட்டியே 6ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட கூடாது. மீறி திறக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக முதல்நாளே பள்ளிகளில் கடுமையான சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.
இரண்டு தேதிகள் ஏன்? : முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிலபஸ் முடிக்க வேண்டும். அதனால் கொஞ்சம் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.
அதனால் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதே சமயம் சிறு குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாக திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் , 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.
வெயில் குறையவில்லை: அதே சமயம் தமிழ்நாட்டில் இன்னும் வெயில் குறையவில்லை. கடந்த வாரங்களில் நிலவிய அதே வெயில் இன்னமும் நீடிக்கிறது. முக்கியமாக சென்னையில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நீடிக்கிறது.
விடாத வெயில்: பொதுவாக ஜூன் முதல்வாரம் தமிழ்நாட்டில் லேசாக மழை தொடங்கும். மழை இல்லை என்றாலும் வெயில் குறையும். இதனால் மாணவர்கள் பள்ளிகள் செல்ல வசதியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த முறை வெயில் குறையவில்லை. மாறாக வெயில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வரை கூட உயர்ந்து உள்ளது.
இதனால் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு செல்வது சிரமம் ஆகும். இதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு முன்னதாக 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் வெயில் குறையாத காரணத்தால் தற்போது இரண்டாவது முறையாக தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன












Click it and Unblock the Notifications