கிழக்கு திமோர் நாட்டில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்? இத்தாலியில் பொட்டு அம்மான்? பரபர தகவல்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கிழக்கு திமோரில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கிழக்கு திமோர் நாட்டில் இருக்கலாம்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் இத்தாலியில் சிகிச்சை பெறுகிறார் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இதனையடுத்து பிரபாகரன் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இல்லை என ஒருதரப்பு சொல்கிறது. அதேநேரத்தில் பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஒரு அரசியல் இயக்கம் உருவாகப் போகிறது அதற்கான முன்னோட்டமே இது என்கின்றன சில தகவல்கள்.

இந்நிலையில் பிரபாகரன் தொடர்பாக ஈழத்து கவிஞரும் திரைப்பட நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு- நந்திக் கடல் இடையேயான அலையாத்தி காடுகளில்தான் பிரபாகரன் இருந்தார். அங்கிருந்துதான் யுத்தத்தை பிரபாகரன் நடத்தினார் என செய்திகள் கிடைத்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் சரணடைய முன்வந்தது. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது தென்னாப்பிரிக்காவும் கிழக்கு திமோர் நாடும்தான். இருநாடுகளும் விடுதலைக்காக போராடியவை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தென்னாப்பிரிக்கா, கிழக்கு திமோரில்தான் பாதுகாப்பாக இருந்தனர். பொட்டம்மான் பின்னர் சிகிச்சைக்காக இத்தாலி சென்றார் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவும் கிழக்கு திமோரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என கொள்கையாக கொண்டிருந்தவை.
பிரபாகரன் போராட்டத்தை நடத்தியவர்; அதனால் அவர் உயிருடன் இருக்க கூடாது; அவர் உயிருடன் இருப்பது அவருக்கு அவமானம் என கருதக் கூடாது. அது பிழையானது. அது அறியாமையாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சில நம்பிக்கையான வட்டாரங்கள் கூறி இருக்கின்றன. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. பிரபாகரன் குறித்த இந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். எதற்கும் சில மாதங்கள் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன்பின்னரே பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதை உறுதி செய்வோம். இவ்வாறு வ.ஐ.ச.ஜெயபாலன் கூறினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications