Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குழந்தை பிறப்பை தள்ளி போடுங்க".. நடிகர் ராம்சரண் மனைவி கருத்தால் சர்ச்சை.. ஸ்ரீதர் வேம்பு பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛பெண்கள் தங்களின் கருமுட்டைகளை மருத்துவ ரீதியாக பாதுகாக்க வேண்டும். பொருளாதாரத்தில் சுதந்திரத்தை உணர்ந்த பிறகு குழந்தை பெற்றெடுக்க வேண்டும்'' என்று நடிகர் ராம்சரண் மனைவியும், தொழிலதிபருமான உபசனா கோனிடேலா தெரிவித்த கருத்து சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் தான் அவரது கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு, கடும் எதிர்ப்பு தெரிவித்து குழந்தை பெற்றெடுப்பதை தள்ளிப்போடாதீங்க. திருமணம் ஆனவுடன் குழந்தையை பெற்றெடுத்து கொள்ளுங்கள் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா கோனிடேலா. இவர் பெரும் கோடீஸ்வரர். தொழிலதிபராகவும் வலம் வருகிறார். உபாசனா கோனிடேலாவின் தாத்தா பிரதாப் சி ரெட்டி. இவர் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் ஆவார்.

egg-freeze-row-zoho-sridhar-vembu-counters-actor-ram-charan-wife-upasana-and-advices-marry-and-hav

தற்போது உபாசனா அப்பேலோ அறக்கட்டளையின் துணை தலைவராகவும், ‛பி பாசிட்டிவ்' பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டில் ராம்சரணை கரம் பிடித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் இருவரும் குழந்தையை பெற்றெடுத்தனர். கடந்த 2023ம் ஆண்டில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது 2வது முறையாக அவர் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் தான் ஐஐடி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் உபாசனா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛பெண்களுக்கான பெரிய இன்சூரன்ஸ் என்பது கருமுட்டையை Freeze செய்து வைப்பது தான். எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும். எப்போது குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்பது உங்களின் விருப்பமாக தான் இருக்க வேண்டும். நீதி பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது குழந்தையை பெற்றெடுக்கலாம்.

நான் இன்று என் சொந்த காலில் சுதந்திரமாக நிற்கிறேன். என் பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளேன். இது என் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இது எந்த முடிவையும் எடுக்கலாம் என்ற தைரியத்தை தந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் 30 வயதிற்குள் உங்கள் குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு உங்களைத் தடுக்க யாராலும் முடியாது'' என்று கூறினார்.

அதாவது பெண்கள் தங்களின் கருமுட்டைகளை மருத்துவ ரீதியாக பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதன்பிறகு பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்து குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். உபாசனா பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இவரது கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உபாசனா கோடீஸ்வரர் வீட்டு பெண். அதனால் அவரால் அப்படி இருக்க முடியும். கருமுட்டைகளை மருத்து ரீதியாக பாதுகாக்க முடியும். ஆனால் மற்ற பெண்களின் சூழல் உபாசனாவை போல் இல்லை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான்உபாசனாவின் பேச்சுக்கு ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் சிஇஓவுமான ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உபாசனா தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த பதிவை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளதாவது: ‛‛நான் சந்திக்கும் இளம் தொழில் முனைவோர், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டு தங்களின் 20S வயதில் குழந்தைகளை பெற்றுக்கெள்ள வேண்டும் என்றும், அதை தள்ளிப்போட வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன்.

சமூகத்திற்கும் தங்களின் மூதாதையர்கள் மற்றும் மக்கள்தொகைக்காக இதனை செய்ய வேண்டும். இந்த கருத்துகள் பழமையானவை என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த கருத்துகள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+