சென்னை எழும்பூர் கோர்ட்டில் போலி ஆதார் , ரேஷன் கார்டு மூலம் ஜாமீன் பெற முயற்சி.. சிக்கியது எப்படி
சென்னை: நீதிமன்றங்களில் ஜாமீன் பெற வேண்டும் என்றால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, சொத்து பத்திர நகல் உள்பட ஆவணங்களுடன் குறிப்பிட்ட விஏஓ அலுவலகத்தில் சென்று ஜாமீன் சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த சான்றிதழை தந்தால் மட்டுமே நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கும். இப்படி ஜாமீன் வாங்க போலி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு பயன்படுத்தினால் நீதிமன்றத்தில் கம்பி எண்ண வேண்டியது வரும். அந்த வகையில் எழும்பூர் கோர்ட்டில் போலி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மூலம் ஜாமீன் பெற முயற்சித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் குற்றவியல் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு காவலில் இருப்பவர்கள் கைதான நாளில் இருந்தே, ஜாமீனுக்கு விண்ணப்பிப்பார்கள். ஜாமீன் பெற வேண்டும் என்றால், கைது செய்யப்பட்ட நபரை விசாரணை தேதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவாதத்தை ஜாமீன் கோருபவர் அளிக்க வேண்டும்.

ஜாமீன் பெறுவது எப்படி
வழக்கமாக, குற்றம் சாட்டப்பட்ட நபரின் உறவினர் அல்லது நண்பர் ஜாமீன் தருவார்கள். பல்வேறு வழக்குகளில் ஒருவர் ரத்த உறவாகவும் இன்னொருவர் நண்பர் அல்லது வேறுஒருவராகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால், ஜாமீன் தொகையை செலுத்த போதுமான வழிகள் இருப்பதாக உறுதிமொழிப் பத்திரத்தை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை தேதியில் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்ற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும்.
ஜாமீன் பெற ஆவணங்கள்
ஜாமீன் கோருபவரின் அடையாளச் சான்றை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அவரது பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற அரசால் வழங்கப்பட்ட அடையாளச் சான்றினை வழங்க வேண்டும். அதேபோல் ஜாமீன் தர விரும்பும் நபர், முகவரி சான்றிதழையும் சமர்பிக்க வேண்டும். ஈபி பில், சிலிண்டர் பில், வங்கி அறிக்கை அல்லது வாடகை ஒப்பந்தம் போன்ற தங்களுடைய குடியிருப்பு முகவரியை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.
ஜாமீன் தொகை எவ்வளவு
அதேபோல் ஜாமீன்தாரர், சம்பளச் சீட்டு, வருமான வரிக் கணக்குகள் அல்லது வங்கி அறிக்கைகள் போன்ற உத்தரவாதமாக நிற்பதற்கான அவர்களின் நிதித் திறனைக் காட்டும் ஆவணங்களை வழங்க வேண்டியதிருக்கும். அதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு ஜாமீன் பொறுப்பேற்பார் என்று கூறி, ஜாமீனுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையேயான சட்டப்பூர்வ ஒப்பந்தமான ஜாமீன் பத்திரத்தில் ஜாமீன்தாரர் கையெழுத்திட வேண்டியது அவசியம் ஆகும். ஜாமீன் தொகையாக 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் கட்ட வேண்டியதும் இருக்கும். ஜாமீன் பெறும் போது போலி சான்றிதழ் தருவோர் சிறையில் கம்பி எண்ண வேண்டியதிருக்கும். அப்படியான சம்பவம் எழும்பூரில் நடந்துள்ளது.
ஜாமீன் கோரிக்கை
சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்று நடந்து வந்தது. இதில், வடிவேல் என்பவருக்கு கடந்த ஏப்ரல் 22-ந்தேதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ந்தேதி அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. ஜாமீன் பெற 2 பேர் கையெழுத்திட்டு, அவர்களின் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, கொருக்குப்பேட்டை காரனேஷன் நகரைச் சேர்ந்த மோகன் (வயது 60), தண்டையார்பேட்டை அஜிஸ் நகர், 2-வது தெருவைச் சேர்ந்த முகமது ரபீ (50) ஆகியோர் அவர்களது ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications