சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

''எழும்பூரில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்குவேன்''.. நம்பிக்கையூட்டும் தி.மு.க வேட்பாளர்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் பம்பரமாக சுழன்று வருகிறது. எலும்பூர் தொகுதி திமுக வேட்பளார் பரந்தாமன், வீடு, வீடாக தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியிலும் அவரை சந்தித்து சில கேள்விகளை முன்வைப்போம் வாங்க.

எழும்பூர் திமுக கோட்டையாக மாறும்

எழும்பூர் திமுக கோட்டையாக மாறும்

எழும்பூர் தொகுதியில் உங்களை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்கீறார்களே?


திமுக ஆட்சிக்கும், தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் வர மக்கள் விரும்புகிறார்கள். எனவே யார் செல்வாக்கு பெறுவார்கள்? என்பது மே 2-ம் தெரிந்து விடும். இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக மாறும். பொறுத்திருந்து பாருங்க.

முஸ்லீம்கள் ஆதரவு

முஸ்லீம்கள் ஆதரவு

உங்கள் தொகுதியில் முஸ்லீம் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன திட்டங்கள் வைத்த்துள்ளீர்கள்?


திமுக தேர்தல் தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் எழும்பூர் தொகுதியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. முஸ்லீம் மக்களிடமும் இதை நான் உத்தரவாதம் அளித்துள்ளேன்.

குப்பை மேடாக காட்சியளிக்கிறது

குப்பை மேடாக காட்சியளிக்கிறது

இந்த தொகுதிக்கு என்னென்ன வாக்குறுதிகள் வைத்துள்ளீர்கள்?


எழும்பூர் தொகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியதுள்ளது. பல இடங்கள் குப்பை மேடாக இருந்து வருகிறது. குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் வழங்க வேண்டியதுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வசதிகள் நிறைவேற்றப்படும்.

குடிசைகள் இல்லாத நிலை

குடிசைகள் இல்லாத நிலை

உங்கள் பிரசார வியூகம் என்ன? பிரசாரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை முன்வைக்கிறீர்கள்?


தொகுதியில் சுமார் 80 சதவீத பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்றே வாக்கு சேகரிக்கிறேன். தொகுதி மக்கள் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் விதைத்து வருகிறேன். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களையும் கூறி வாக்கு சேகரிக்கிறேன். எலும்பூரில் குடிசை வீடுகளே இல்லாத அளவுக்கு அனைவருக்கும் குடிசை மாற்று வாரிய சார்பில் வீடுகள் வழங்கப்படும் என்று மக்களிடம் உறுதியளித்துள்ளேன்.

English summary
DMK candidate Barandaman said he would create a situation where there were no huts in Egmore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X