2024 தேர்தல் ஆபரேஷன் ஸ்டார்ட்.. சென்னையில் தலைமை தேர்தல் ஆணையரின் முக்கிய கூட்டம்! நாள் குறிச்சாச்சு
சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது. அக்கட்சி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து 2 வது முறையாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து வருகிறது. இந்த அரசின் பதவி காலம் ஜூன் 16 தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

தற்போதே தேர்தல் பணியில், ஆளும் கட்சி பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இறங்கிவிட்டன. 3 வது முறையாக தேர்தலில் வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது 'இந்தியா' கூட்டணி வென்று பாஜகவிடம் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஒருபக்கம் சென்றுகொண்டு இருக்க, தேர்தலை நடத்த உள்ள தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கி இருக்கிறது.
18 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மார்ச் இறுதியில் தேர்தல் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னையில் நடத்த முடிவு செய்து உள்ளது. ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு வருகை தர உள்ளார்கள்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள், தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை கண்காணிப்பார். இறுதி வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 272 என்ற பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் கூட்டணி ஆட்சியமைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications