Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிலும் அதிமுகவிலும் சீட்டு பிடிப்பதில் சீனியர்கள் ஜூனியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் திமுகவில் சீட்டு கேட்டு சீனியர்கள், ஜூனியர்கள் பலர் போட்டி போட்டு வந்த நிலையில் சிட்டிங் எம்எல்ஏவான காந்திராஜனை மீண்டும் களம் இறக்க திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேடசந்தூரில் வெற்றி பெற்றால் கோட்டையில் கொடி நாட்டலாம் என்ற சென்டிமென்ட் காரணமாக ரிஸ்க் எடுக்க விரும்பாத திமுக தலைமை சீனியரான காந்திராஜனை களமிறக்க உள்ளதாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.

2026 சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வு என திமுகவும் அதிமுகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆளும் கட்சியான திமுக இரண்டாவது முறை தொடர்ந்து ஆட்சி அமைத்து சாதனை படைக்க வேண்டும் என முயன்று வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேரடியாக சந்திக்கும் இரண்டாவது சட்டமன்ற தேர்தல் என்பதோடு, இதுவரை திமுக அடுத்தடுத்து ஆட்சி அமைத்ததில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறார் ஸ்டாலின்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 dmk mk stalin

முக ஸ்டாலின்

தொடர்ந்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தினமும் நேரடியாகவே வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகளிடம் நேரடியாக பேசும் அவர், தொகுதியின் நிலவரம், வெற்றி வாய்ப்பு, புதிய அரசியல் கட்சிகளின் வரவால் தாக்கம் ஏற்படுமா? என பல கேள்விகளை கேட்டு வருகிறார். இது மட்டுமில்லாமல் சில நிறுவனங்களின் மூலம் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலும் வேட்பாளர் பட்டியல் ஓரளவு தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது.

காந்திராஜன்

அந்த வகையில் திண்டுக்கல்லில் முக்கிய தொகுதிகளில் ஒன்றான வேடசந்தூர் தொகுதியின் வேட்பாளர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. சிட்டிங் எம்எல்ஏவும் முன்னாள் சட்டசபை துணை சபாநாயகருமான காந்திராஜன் இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என உடன்பிறப்புகள் கூறி வந்தனர். இதை அடுத்து வேடசந்தூரில் ஜூனியர்கள் பலர் முதன்முறையாக தேர்தலில் களமிறங்க வாய்ப்பு கேட்டு வந்தனர். ஒரு சிலர் நாங்கள் தான் வேட்பாளர் என ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.

வேடசந்தூர் தேர்தல் சென்டிமென்ட்

இந்த நிலையில் வேடசந்தூர் தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது வேடசந்தூர் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. சில நிர்வாகிகளிடம் தனியாகவும் பேசி இருக்கிறார் ஸ்டாலின். இந்த நிலையில் வேடசந்தூரில் வென்ற கட்சியை ஆட்சியைப் பிடித்து வந்த சென்டிமென்ட் காரணமாக அந்த தொகுதிக்கு தனிக் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஸ்டாலின் தேர்வு

தற்போது வாய்ப்பு கேட்கும் ஜூனியர்கள் பலரும் வெவ்வேறு சமூகங்களை சார்ந்தவர்கள். ஆனால் வேடசந்தூர் தொகுதியை பொருத்தவரை இதுவரை பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஒக்கலிக கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அந்த சமூகமே அங்கு கோலோச்சி வருகிறது. அதிமுக தரப்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் பரமசிவமும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.

திமுக தலைமை

இந்த நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக காந்தி ராஜனை ஒதுக்கலாம் என சில ஜூனியர்கள் திட்டம் தீட்டிய நிலையில் சமூக செல்வாக்கு, சிட்டிங் எம்எல்ஏ உள்ளிட்ட பிளஸ் பாயிண்ட்டுகளை திமுக தலைமையிடம் எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து மீண்டும் காந்தி ராஜனுக்கு வாய்ப்பளிக்க திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை அடுத்து உற்சாகமடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள் தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளனர்.

ஜூனியர்கள் அதிருப்தி

ஆலோசனைக் கூட்டங்கள் என தற்போது வேலைகள் களைகட்டி வருகிறது. இதற்கிடையே நாங்கள்தான் வேட்பாளர் என வேடசந்தூரில் உற்சாகமாக வலம் வந்த ஜூனியர்கள் பலர் தலைமையின் இந்த முடிவால் சோர்வடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் வேட்பாளர் பட்டியல் இறுதியாகவில்லை வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இரு தரப்பும் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+