Election Exclusive: பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்..அறிவாலயத்தில் ஐக்கியமான ஓபிஎஸ்! இப்படி ஒரு சிக்கலா?
சென்னை: அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அதிமுக பொருளாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் என்ற ஓபிஎஸ், தாம் நீண்ட காலம் எதிர்த்து வந்த திமுகவுடன் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும், மூன்று முறை முதல்வர் பதவி வகித்தவராகவும் இருந்த ஓபிஎஸ் எடுத்துள்ள இந்த முடிவு, அவரது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவருக்கு மிகுந்த நெருக்கடையையே தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியை காப்பாற்றுவேன் என்ற உறுதியுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தம் அப்போது அவருக்கு தனித்துவமான அரசியல் முகத்தை உருவாக்கியது. குறிப்பாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்கட்சிப் பிரச்சனைகளுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாடு, அடிப்படைத் தொண்டர்களிடம் ஆதரவைப் பெற்றது.
ஆனால், தற்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் திடீரென இணைந்திருப்பது, அந்த தர்மயுத்தத்தின் நோக்கம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது திமுகவில் இணைந்திருக்கும் ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்தே திமுகவின் பேச்சை கேட்டுத் தான் நடந்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஓபிஎஸ் திமுக
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவின் அரசியில் மரபு, ஜெயலலிதா தொடர்ந்த அரசியல் கோட்பாடும் திமுக எதிர்ப்பை மையமாக கொண்டதாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த மரபிலிருந்து விலகிய இந்த முடிவு யாருக்கு அரசியல் பலன் தரும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஓபிஎஸ்-ன் இந்த மாற்றத்தால் தனது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்த முந்தைய செல்வாக்கைத் தக்கவைக்க முடியுமா என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முக்கியமாக தென் தமிழகத்தில் அவருக்கு இருந்த சமூக ஆதரவு, அவர் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த காலத்தில் உருவானது என்று கூறப்படுகிறது.
அதிமுக உட்கட்சி அரசியல்
அந்த ஆதரவு தற்போதைய அரசியல் மாற்றத்தால் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்த வாக்கு வங்கி வேறு அரசியல் கட்சிகளுக்கு திசை மாறக் கூடும் எனக் கருதப்படுகிறது. இந்த சூழ்நிலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு மறைமுக பலனாக அமையும் என சிலர் மதிப்பிடுகின்றனர். சமீப காலங்களில் ஓபிஎஸ் எடுத்த சில அரசியல் நடவடிக்கைகளும் அவரது புதிய அரசியல் அணுகுமுறைக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகின்றன.
ஓ பன்னீர்செல்வம்
சட்டப்பேரவையில் மு. கருணாநிதி குறித்து பாராட்டு தெரிவித்தது, மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தது போன்ற நிகழ்வுகள் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சொந்த மாவட்டமான தேனி பகுதியில் புதிய அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக தங்கத்தமிழ்செல்வன் உடன் பழைய அரசியல் போட்டி இருந்த நிலையில், இருவரும் ஒரே அரசியல் அணியில் இருப்பது உட்கட்சி போட்டிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் அவர் போடி தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தேனி அரசியல்
ஒரு காலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக அரசியல் செய்த ஓபிஎஸ், தற்போது புதிய அரசியல் சூழலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த மாற்றம் அவரது அரசியல் பயணம் எந்த திசைக்கு கொண்டு செல்கிறது என்பது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளால் தீர்மானிக்கப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுகவில் இருந்து, பின்னர் அதிமுகவில் இணைந்து முதலமைச்சர் பதவி வரை சென்ற ஓபிஎஸ் ஒரு எதிர்க்கட்சியில் இணைந்து இருப்பது அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சொல்லும் அரசியல் பார்வையாளர்கள், அதற்கு அவர் அரசியலில் இருந்தே விலகி இருக்கலாம் என்கின்றனர்.
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications