Election Exclusive: சல்லி சல்லியாய் நொறுங்கும் அமமுக.. திணறிப் போன தினகரன்! நிகழ்கால பரதனிடம் ரகசியம் பேசிய சின்னம்மா!
சென்னை: திமுக ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டுமென பாஜக உடன் சேர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை உருவாக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வி.கே. சசிகலா இணைந்து செயல்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி சிதறும் என்ற அச்சம் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வட்டாரங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது. அதை தான் சசிகலாவும் விரும்புகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த சசிகலா, மறைந்த ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். கட்சியின் நிர்வாகத் தீர்மானங்களில் பின்னணியில் இருந்தே செல்வாக்கு செலுத்தியவர் என்ற அடையாளம் அவருக்கு இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா நேரடியாக அரசியல் மேடையில் தோன்றினார். 2017ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர் முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டாலும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காரணமாக பதவி ஏற்க முடியவில்லை.

அதிமுக அதிகாரப் போட்டி
சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தது அப்போது முக்கிய அரசியல் திருப்பமாக அமைந்தது. சிறைவாசம் முடிந்தபின் அரசியல் சூழல் மாறியதால் சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை. கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற அவரது கருத்துகள் நடைமுறைக்கு வரவில்லை. இதற்கிடையில், டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது சசிகலா தரப்பில் விருப்பமில்லாத மாற்றமாக பார்க்கப்பட்டது.
சசிகலா புதிய கட்சி
இந்த நிலையில் சசிகலா புதிய கட்சி தொடங்குவது அல்லது தனது உறவினர் திவாகரன் நடத்தும் அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில், குறிப்பிட்ட சமூக வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திட்டம் பேசப்படுகிறது. இதற்காக ஓ. பன்னீர்செல்வத்தையும் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தால், தற்போது தினகரனின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் தென் மாவட்ட வாக்கு வங்கி பிளவுபடும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
டிடிவி தினகரன்
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, இதுவரை சசிகலாவை வெளிப்படையாக விமர்சிக்காத டிடிவி தினகரன் சமீபத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. சசிகலாவின் அரசியல் முயற்சிகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
ஓபிஎஸ் சசிகலா கூட்டணி
மேலும், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்படக் கூடாது என்று டிடிவி தினகரன் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில், தென் மாவட்ட அரசியல் சமநிலையில் மாற்றம் ஏற்படும் என்ற அரசியல் கணக்கீடுகள் முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன. மொத்தத்தில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இணையும் சாத்தியம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கக்கூடும் என்ற மதிப்பீடு நிலவுகிறது.
பாஜகவுடன் கூட்டணி
உண்மையை சொல்லப்போனால் எப்படியாவது அதிமுகவுக்குள் செல்ல வேண்டும் என்பதுதான் டிடிவி தினகரனின் எண்ணம். அதற்காக முதல் கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அதே நேரத்தில் சசிகலா தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதால் அவர் மீது அதிருப்தியில் இருக்கும் டிடிவி தினகரன் தொடர்ந்து அவரை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக சசிகலா குறித்து பேசாமல் இருந்த டிடிவி தினகரன் சசிகலாவின் முடிவால் தான் தற்போது அவரை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்ட வாக்கு வங்கி
மேலும் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சேலம் என்ற தகவல்தான் அவரை பசுந்தோல் போர்த்திய புலி என விமர்சித்தார் என்கின்றனர் ஏற்கனவே சசிகலாவை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தூக்கி அடிக்கப்பட்டு வருகின்றனர். அதிமுகவுடன் சேரக்கூடாது என்ற முடிவில் இருக்கும் பல அதிமுகவினரும் அடுத்தடுத்து சசிகலா அணியில் இணையலாம் என சொல்லப்படுகிறது. இது டிடிவி தினகரனுக்கு தான் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications