Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: விஜய்+ஓபிஎஸ்+சசிகலா.. அதிமுகவுக்கு ஆப்படிக்க ரெடியாகும் டீம்! தென்னகத்தை வைத்து சின்னம்மாவின் ப்ளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் தன்னை சேர்க்காத எடப்பாடி பழனிச்சாமியையும், தன்னை சந்தித்ததற்காக பெண் நிர்வாகியை நீக்கிய டிடிவி தினகரன் மீதும் சசிகலா மிகுந்த கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருக்கும் 25 தொகுதிகளில் விஜய், ஓ பன்னீர்செல்வத்துடன் கூட்டணி அமைத்து சசிகலா போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தனது தம்பி திவாகரனின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மூலம் சசிகலாவும் தேர்தலில் போட்டியிடப் போவதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் தினமும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதிமுகவில் அரசியல் வாரிசு விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் கைகோர்த்துள்ள அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் அரசியல் ரீதியாக வீழ்த்த புதிய வியூகம் வகுத்துள்ளதாக பேசப்படுகிறது.

Tamil Nadu Assembly Election 2026 Vijay Sasikala

சசிகலா திட்டம்

ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்க வேண்டும் என்ற ஆசை சசிகலாவுக்கு இருந்தது. ஆனால், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் சட்ட நடவடிக்கைகள், அவரது அரசியல் பயணத்திற்கு ஒரு வகையில் தடையாக அமைந்தன. இதனால் நேரடியாக அரசியலில் முன்வராமல், பின்னணியில் இருந்து இயக்கும் அரசியலை அவர் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

2026 தேர்தல்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்த சசிகலா, கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் தன்னை ஆதரிக்கும் அரசியல் பிரமுகர்களை தனது வீட்டுக்கு அழைத்து ஆலோசனைகள் நடத்தி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசூரில் தனது ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். அப்போது, என் ஆதரவில்லாமல் தமிழகத்தில் அடுத்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அவர் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

பல தலைவர்கள் இதை கேலி செய்தாலும், அதன் பிறகான அரசியல் நகர்வுகள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன. அதிமுகவில் இருந்து தன்னை, ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதனை பழனிசாமி முற்றிலும் நிராகரித்தார். பாஜக தலைமை அளித்த அழுத்தத்தால் அமமுகவை மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள சம்மதித்த பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்.

அதிமுகவுக்கு ஆபத்து

ஓ.பன்னீர்செல்வத்துக்காக பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதோடு, அந்த விவகாரத்தை பேசுபவர்களையும் புறம்தள்ளத் தொடங்கினார். இந்தச் சூழ்நிலையால் கடும் கோபத்தில் இருக்கும் சசிகலா, எடப்பாடி பழனிசாமியையும் டிடிவி தினகரனையும் ஒரே நேரத்தில் வீழ்த்தும் வியூகத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, தனது சகோதரர் திவாகரன் பொதுச்செயலராக உள்ள அண்ணா திராவிடர் கழகம் கட்சியை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் தமிழகம்

இந்த கூட்டணியின் மூலம் தென் தமிழகத்தில் சுமார் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, அதிமுக மற்றும் அமமுகவின் வாக்குகளைப் பிரித்து, அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதே சசிகலாவின் திட்டம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கூட்டணியை உறுதி செய்யும் வகையில், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகர், நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

திவாகரன் கட்சி

இதன் மூலம், நேரடியாக அரசியலில் களமிறங்காத போதிலும், சசிகலா பின்னணியில் இருந்து தமிழக அரசியலை கலங்கடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். வரவிருக்கும் தேர்தலில் இந்த வியூகம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்கு உறுதுணையாக ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு அழைக்கவும் சசிகலா திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. பாஜகவும் ஏமாற்றி விட்டது எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என திட்டவட்டமாக இருக்கிறார். இப்படி தங்களுக்கு எதிராக இருக்கும் நபர்களை பழி வாங்கும் விதமாக தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் அவர்களை தோற்கடிப்பது தான் சசிகலாவின் திட்டம் எனவும், அதனால் தான் ஓபிஎஸ்ஐ கூட்டணிக்கு அழைத்திருக்கிறார் என்கின்றனர் அவர்து ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+