இனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்
சென்னை: ஓரிரு வாரத்தில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், சென்னையில் மின்சார பேருந்து திட்டம் எப்போது துவங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க இருப்பதாக கூறினார்.

மேலும், சென்னையில் 80 பேருந்துகளும், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் தலா 10 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. ஓரிரு வாரங்களில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயங்கும் என்றும், அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப வழிதடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடும் வகையில், 1,903 புதிய பேருந்துகள் வாங்க, 668 கோடியே 69 லட்ச ரூபாய் நிதியை வழங்க, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர் போக்குவரத்து கழகம் இரண்டிலும் பயணம் செய்ய கூடிய வகையில் பொதுவான ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ம் ஆண்டில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் இயக்கிய சிறப்பு பேருந்துகளினால் 210.77கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக போக்குவரத்து துறை கொள்கைவிளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications