மின்வாரிய அரசு ஊழியருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு! கரண்ட் கனெக்ஷன் ₹4000 தந்த தரமான சம்பவம்
சென்னை: பல்வேறு அரசு துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. எனவேதான் லஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை துணிச்சலாக தர முன்வருகிறார்கள்.. நேற்று திருவள்ளூரில் நடந்த சம்பவத்தை பாருங்கள்..
புதிய வீடு அல்லது வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான முறைப்படியான வழிமுறைகளை மின்சார வாரியம் தெளிவாக வரையறுத்துள்ளது.

இதன்படி, நுகர்வோர் முதலில் படிவம் 1-ஐ முறையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் சொத்தின் உரிமையாளராக இருப்பின் சொத்து ஆவணங்களையும், வாடகைதாரராக இருப்பின் படிவம் 5-ன் கீழ் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழையும் இணைத்து, உரிய பதிவுக் கட்டணத்துடன் உதவி செயற்பொறியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மின்சார இணைப்பு
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பிறகு, கள ஆய்வின் மூலம் மின் மீட்டர் பொருத்தும் இடம் தீர்மானிக்கப்பட்டு, வைப்புத்தொகை உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் புதிய இணைப்பு முறைப்படி வழங்கப்படும்.
இருந்தாலும், இத்தகைய வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படாத சூழல்கள் அரங்கேறுவது கவலையளிக்கிறது. சமீபத்தில்கூட விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கைது நடவடிக்கை நடந்தது..
நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், தனது புதிய வீட்டிற்கான மின் இணைப்பை பெறுவதற்காக ரெட்டணை மின் வணிக ஆய்வாளர் ரேகாவை அணுகியபோது, அவர் முறைப்பற்ற வகையில் 4000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். உடனே ரேகாவை சுற்றி வளைத்து அதிகாரிகள் கைது செய்தது நினைவிருக்கலாம்..
மின் இணைப்பு வழங்க முடிவு
இது போன்ற சம்பவங்கள் நுகர்வோரை அலைக்கழிப்பதுடன், நியாயமான முறையில் சேவை பெறுவதைத் தடுத்து, நிர்வாகச் சீர்கேட்டையும் வெளிப்படுத்துகின்றன.. இதே இந்த சம்பவத்தை பாருங்கள்..
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா பேகம். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு கோரி, மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் தொடர்பாக, அந்த அலுவலகத்தில் அப்போது லைன் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த மதியழகன் (60) என்பவரை அணுகியுள்ளார். அப்போது, மின் இணைப்பு வழங்குவதற்கு மதியழகன் 4,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
திருவள்ளூர் கோர்ட்
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆயிஷா பேகம், இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். காவல் ஆய்வாளர் வேலன் சுப்பிரமணி ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய 4,000 ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வழங்க ஆயிஷா பேகம் முடிவு செய்தார்.
அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி, மதியழகனிடம் அந்த பணத்தை வழங்கியுள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மதியழகனை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
3 வருட ஜெயில்
நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பளித்தார். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதால், மதியழகனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே பல்வேறு அரசாங்க துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் வரிசையாகக் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராகத் துணிச்சலாகப் புகார் அளித்தால் உரிய தண்டனை வழங்கப்படும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications