அடுத்து எதுவோ.. திமுக அரசை நினைத்தால் பிபி ஏறுது.. மின்கட்டண உயர்வால் நடிகை கஸ்தூரி பரபர விமர்சனம்
சென்னை: ‛‛சொத்துவரி, பால்பொருள், பருப்பு விலைய ஏத்திய திமுக அரசு மின்கட்டணத்தையும் உயர்த்தியது. அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு பிபி ஏறுது'' என நடிகை கஸ்தூரி அதிரடியாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தில் வரி உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை.

சொத்துவரி உயர்வு
அதாவது சமீபகாலமாக தொடர்ச்சியாக வரி உயர்வு, கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு ஜிஎஸ்டியை காரணம் காட்டி ஆவின் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன.

கஸ்தூரி மின்கட்டண உயர்வு
இதன் தொடர்ச்சியாக மின்கட்டண உயர்வும் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் வேறு வழியின்றி தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இருப்பினும் முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இது சற்று ஆறுதலான விஷயம்.

மின்கட்டண உயர்வு எவ்வளவு?
இருப்பினும் வீடுகளில் 101 - 200 யூனிட்களுக்கு ரூ.170 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.225 ஆகவும், 201 - 300 யூனிட்களுக்கு ரூ.530 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.675 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 301 - 400 யூனிட்களுக்கு ரூ.830 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,125 ஆகவும், 401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,725 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் தொழிற்சாலைகள், கடைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு வழங்கும் யூனிட் மின்சாரத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

திமுகவை நினைத்தால் பிபி ஏறுது
இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரி, திமுக அரசு பற்றி தனது ட்வீட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், ‛‛ஏற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க பால்பொருள் விலை, பருப்பு விலை எல்லாம் ஏறியாச்சு, மறுபடியும் electrricity கட்டணம் ஏத்திட்டாங்க. இப்போது water sewage கட்டணமும் ஏறிடுச்சு. அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது''என திமுக அரசின் செயல்பாடு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications