சென்னையில் இன்று கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், புழல், பெசன்ட் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின் தடை
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், புழல், கந்தன்சாவடி, பெசன்ட் நகர் உள்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோடை காலத்தில் சுட்டெரிப்பது போல் சென்னையில் தற்போது வெப்பம் சுட்டெரிக்கிறது. வீடுகளுக்குள் ஃபேன் அல்லது ஏசி இல்லாமல் பகலில் இருக்கவே முடியாது என்கிற அளவிற்கு வெப்பம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான வெப்பம் தகிக்கிறது. சென்னை தமிழ்நாட்டின் மிகப்பெரிய கான்கிரீட் காடு என்பதால் இப்போது வரும் வெப்பம் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.

பலரும் பகலிலும் ஏசி போட்டு தான் வீட்டிற்குள் வசிக்கிறார்கள். இதன் காரணமாக ஏசி இல்லாத வீடுகளை விரைவில் விரல்விட்டு எண்ணும் நிலை சென்னை சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே மின்சார வாரியம் முடிந்தவரை மின்சாரம் ரத்தாகாத அளவிற்கு பணியினை செய்து வருகிறது. அதேநேரம் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளைத்தான் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், பெசன்ட் நகர் உள்பட முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரைமின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "சென்னை-யில் 17.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், புழல், கந்தன்சாவடி, பெசன்ட் நகர், எழில் நகர், அம்பத்தூர் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications