Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை முதல் மின் கட்டண உயர்வு.. வணிக மின் இணைப்பு வைத்திருப்போர் அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையங்களுடன் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்பாலைகள், மில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு 7.90 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கு திட்டமிட்டபடி கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது..

தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதை சுட்டிக்காட்டி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்துவற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. அதேநேரம் வீடுகளுக்கு அதன்பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனினும் கடைகள் உள்பட வணிக மின்இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது வரும் 2026-2027-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி முதல் மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Electricity tariff hike from tomorrow What commercial electricity connection holders need to kno

எவ்வளவு கட்டணம் உயர்வு

இதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மின்சார கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இதன்படி யூனிட்டுக்கு 15 காசு முதல் 37 காசு வரை மின்சார கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் மின்கட்டணம் ஜூலை 1-ந் தேதி (அதாவது நாளை) முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

ஆனால் இந்த மின் கட்டண உயர்வு வணிக மின்இணைப்பு வைத்திருப்பவர்களுக்கே இருக்க போகிறது. ஏனெனில் வீட்டு உபயோகத்துக்கான மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது. அது தொடர்பாக, ஏற்கனவே கடந்த மே 20-ந் தேதி வீட்டு மின்சார இணைப்புகளுக்கு எவ்வித மின்சார கட்டண உயர்வும் இல்லை என்று விரிவான விளக்கம் அளித்தோம். ஆனால் தற்போது மீண்டும் மின்கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவுகிறது. எனவே இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது.

மின்சார கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்சார கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின்சார நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்தவொரு மின்சார கட்டண உயர்வும் இருக்காது. தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். எனவே, மின்சார கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்" என்றார்.

அரசு சொல்வது என்ன

அரசு தெளிவாகவே இதில் கூறியிருப்பது என்னவென்றால், வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை என்பது மட்டும் தான். ஆனால் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்படுமா இல்லையா என்பது குறித்து அரசு தெளிவாக கூறவில்லை. அதாவது மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு இருக்காது என்றுதான் கூறியிருக்கிறது. தற்போதைய நிலையில் மின்சார வாரியத்துக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி வரை கடன் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே தான் கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரப்பட்டதாம்.

வணிக மின் இணைப்பு

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி 6 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்த அனுமதி பெறப்பட்டிருக்கிறதாம். அதன்படி இந்த ஆண்டு கட்டணம் உயர்த்த திட்டமிட்ட அரசு, வழக்கம் வீட்டு மின் இணைப்புகளுக்கு மானியம் வழங்குவதுடன், சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் வணிக மின் இணைப்பு வைத்திருப்போருக்கு மின் கட்டணம் நாளை உயர்த்தப்படும் என்ற தெரிகிறது. அரசு வீடுகளுக்கு அளித்த சலுகையை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு அளிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.. இதுபற்றி இன்னும் அரசு தெளிவாக விளக்கம் அளிக்காத நிலையில், நாளை முதல் வணிக நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு இருக்கும் என்பது தெரிகிறது.

கட்டண உயர்வு உறுதி

எனவே தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நூற்பாலைகள், மில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் 7.90 லட்சம் மின்சார இணைப்புகள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நாளை முதல் மின் கட்டண உயர்வை சந்திக்கப்போவது உறுதியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+