இனி உரசுனா.. 5 நிமிஷத்தில் போலீஸ் தூக்கிடும்! சென்னை பஸ்களில் வரும் அவசர "பட்டன்".. மாஸ் அறிவிப்பு
சென்னை: பஸ்களில் இனி ஆண்கள் உரசினாலோ, பாலியல் தொந்தரவு கொடுத்தாலோ போலீஸை பெண்கள் அழைப்பதற்கு அவசர பட்டன் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சோதனை முயற்சியாக முதன்முதலில் சென்னையில் உள்ள பஸ்களில் இந்த அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்னர், மற்ற மாவட்டங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வசதி மூலம், பஸ்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வக்கிர புத்தி ஆண்கள்
பஸ்களில் செல்லும் பெண்கள் தினம் தினம் படும் அவஸ்தைகளில் ஒன்றாக இருப்பது ஆண்களின் பாலியல் தொந்தரவு. கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொள்ளும் ஆண்கள் சிலர், பெண்களிடம் தங்கள் வக்கிரத்தை காட்டி வருவது வாடிக்கையாகிவிட்டது. ஒருசில பெண்கள் மட்டுமே ஆண்களின் இந்த செயல்களை துணிச்சலாக தட்டிக் கேட்கிறார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள் பயந்துகொண்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள். இது, அந்த வக்கிர புத்தி கொண்ட ஆண்களுக்கு வசதியாகி விடுகிறது.

வந்துவிட்டது 'அவசர பட்டன்'
இந்நிலையில், பஸ்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவை ஒழிக்கும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை மாநகர பஸ்களில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்களில் பயணம் செய்யும் போது ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொந்தரு செய்தாலோ பெண்கள் இந்த அவசர பட்டனை அழுத்தலாம்.

போலீஸாருக்கு கிடைக்கும் சிக்னல்
இவ்வாறு அந்த பட்டனை அழுத்துவதால் எந்த சத்தமும் வராது. ஆனால், அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்த சிக்னல் கிடைத்துவிடும். மேலும், அது என்ன பஸ், தற்போது அது எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் போலீஸாருக்கு ஜிபிஎஸ் மூலம் தெரிந்துவிடும். இதையடுத்து, ஒருசில நிமிடங்களிலேயே அந்த பஸ்ஸில் போலீஸார் ஏறி, பாலியல் தொந்தரவு தரும் நபரை பிடித்து சென்று விடுவார்கள்.

விழிப்புணர்வு பிரச்சாரம்
தற்போது முதல்கட்டமாக, சென்னையில் 1200 போக்குவரத்துக் கழக பஸ்களில் இந்த அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள பஸ்களில் இந்த அவசர பட்டன்கள் பொருத்தப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த அவசர பட்டனை எப்படி இயக்குவது, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications