“என் மூச்சு உள்ள வரை”.. ராமதாஸ் சொன்னபோதே பனையூரில் அவசர மீட்டிங் போட்ட அன்புமணி.. விக்கித்த தலைகள்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூச்சு உள்ள வரை தலைவர் பதவி அன்புமணிக்கு கிடையாது எனக் கூறிய நிலையில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று அன்புமணி தலைமையில் பனையூரில் நடைபெற்று வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று பேசினார். ராமதாஸின் பேச்சால் அதிர்ந்து போன அன்புமணி, அவசர அவசரமாக கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் அனைவரும், மயிலம், தருமபுரி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றும் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூச்சு உள்ளவரை பாமக தலைவர் பதவி அன்புமணிக்கு கிடையாது, அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, அவருக்கு நான் தலைவர் பதவியை வழங்கமாட்டேன் எனக் கூறினார்.
என் உத்தரவுப்படி, அன்புமணி செயல் தலைவராக இருப்பதாக சொன்னால் எனக்கு மகிழ்ச்சி. அன்புமணியை பார்த்தாலே ரத்த அழுத்தம் கூடுகிறது. மேடையில் மைக்கை தூக்கி அடிக்கிறார். தந்தையையும் தாயையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அவரது அம்மாவை பாட்டிலால் தாக்குகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமதாஸின் இந்தப் பேச்சுக்கு மத்தியில், அன்புமணி தலைமையில் இந்த அவசர அலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாமகவில் தந்தை மகனுக்குமான அதிகார மோதல் கடந்த டிசம்பர் மாதம் முதல் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தவுடன் ஆரம்பித்தது. அப்போது முதல் தற்போது வரை அதிகார மோதல் நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாவட்ட செயலாளர்களுடம் அன்புமணி பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, உறுப்பினர் சேர்க்கை, கட்சியை பலப்படுத்துவது குறித்து பேசி வருகிறார். அவ்வப்போது ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கும் பொறுப்பாளர்களை மீண்டும் அன்புமணி கட்சியில் சேர்ப்பது என நாளுக்கு நாள் மோதல் நீடித்துள்ளது.
இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில் அன்புமணி ராமதாஸ், ஜூலை 25 முதல் உரிமை மீட்பு நடைபயணம் செல்ல உள்ளார். தந்தை மகன் மோதல் பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என பாமகவினர் எதிர்பார்த்து யார்பக்கம் செல்வது என தெரியாமல் மதில் மேல் பூனையாய் மனக்குமுறலுடன் காத்திருக்கின்றனர்.
-
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications