இஎம்ஐ + எஸ்ஐபி.. வீட்டுக் கடன் இஎம்ஐயை இப்படி செய்தால் கொள்ளை லாபம் கிடைக்கும்! இதை பாருங்க
சென்னை: பலரும் வீட்டுக்கடனை வேகமாக முடிக்க ஆசைப்படுகிறார்கள். அது நியாயம் தான். ஆனால் அதற்காக நீங்கள் கட்டும் கூடுதலான 15 சதவீதம் பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அண்மையில் ஒரு தொலைக்காட்சியின் யூடியூப்பில் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் வீட்டுக்கடனை வேகமாக அடைக்க ஆசைப்படுபவர்கள் அதை விரைவாக அடைக்க முயற்சிப்பதற்கு பதில் அந்த பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் மாதம் மாதம் முதலீடு செய்தால் கணிசமாக லாபம் கிடைக்கும் என்று கூறினார்.
இது எப்படி சாத்தியம் என்பதை முழுமையாக பார்த்த போது சில விஷயங்கள் தெரியவந்தது. அதை தான் இங்கு பகிர போகிறேன். பொதுவாக நமக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சென்னையில் வாழ்பவர்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகும். எப்படியாவது ஒரு வீட்டை கட்டிவிடலாம் என்றால் அதற்கு பல லட்சம் செலவாகும் . கடன் வாங்கி தான் வீட்டை கட்ட முடியும். சரி அப்படி கடன் வாங்கி கட்டிய வீட்டில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் கடனை அடைத்துவிடத்தான் விரும்புவோம். பலரும் கூடுதலாக தொகையை கட்டி விரைவாக வீட்டுக்கடனை முடிக்க விரும்புகிறார்கள். இது சரியானது தான் என்றாலும், அந்த கூடுதலாக கட்டும் 15 சதவீதம் பணத்தை நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எப்படி என்பதை சிறிய உதாரணத்துடன் பார்ப்போம்.
30 லட்சத்தை 25 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வீட்டுக் கடனாக ஒருவர் வாங்கி உள்ளார் என்று வைத்துக்கொள்ளுங்கள் இதற்கான வட்டி விகிதம் 9% என்று இருக்கலாம்.
ரூ.30 லட்சத்தை 9% வட்டி யில் 25 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த மாதம் தோறும் சுமார் 25000ம் ரூபாயை இ.எம்.ஐ-ஆகக் கட்ட வேண்டியதிருக்கும். இப்படித் திரும்பச் செலுத்தி, வீட்டுக் கடனைக் கட்டி முடிக்கும்போது மொத்தமாக அவர் எவ்வளவு கட்டியிருப்பார் தெரியுமா? ரூ.75 லட்சத்திற்கு மேல் கட்டியிருப்பார். அதேநேரம் வட்டியாக மட்டும 45 லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டியிருப்பார். அதாவது வீட்டின் மதிப்பு 30 லட்சம் என்றால் அதை விட ஒரு மடங்கு அதிமாக அதாவத 45 லட்சத்தை வட்டியாக கட்டியிருப்பார்.

வீட்டுக் கடன் ரூ.30 லட்சத்தைக் கட்டி முடிக்க மாதம்தோறும் ரூ.25 இ.எம்.ஐ-ஆகச் செலுத்தும் அதே சமயம், அவர் இ.எம்.ஐ-ஆக கட்டும் தொகையில் 15% பணத்தை, அதாவது 3,776 ரூபாயை 25 ஆண்டு களுக்கு, ஆண்டுதோறும் 12% வருமானம் தரும் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் உங்களுக்கு சுமார் 60 லட்சம் கிடைக்கும். மொத்தமாகக் கட்டும் தொகை - ரூ.11,32,915 லட்சம் தான், ஆனால் உங்களுக்கு லாபமாகக் கிடைக்கும் தொகை - ரூ.48,73,730 ஆக இருக்கும் என்கிறார்கள்.
அதேநேரம் இதைவிட மிகச்சிறந்த ஆப்சனும் இருக்கிறது. கடன் வாங்காமல் வீடு கட்டுவது தான். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா.. நம்மால் கடனை நிச்சயம் அடைக்க நிரந்தர வருமானம் இருக்கிறது என்றால், கொஞ்ச காலம் காத்திருந்து வீடு கட்டினால் நீங்கள் நினைக்கும் வீட்டை கண்டிப்பாக கட்ட முடியும்.
மாதம் 25 ஆயிரத்தை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், ஐந்து வருடத்தில் 15லட்சம் ரூபாய் அளவிற்கு கட்டியிருப்பீர்கள். உங்களுக்கு சுமார் 20 லட்சம் கிடைக்கும். கூடுதலாக பணம் சேர்ந்து நீங்களே வீடு கட்டிவிடலாம். இதுவும் சிறந்த பிளான்களில் ஒன்று தான், ஆனால் என்ன ஐந்து வருடம் வீடு கட்ட காத்திருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் மியூச்வல் பண்ட் முதலீடுகள் குறித்து சரியான பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். அவர்கள் சொல்கிறார்கள், இவர்கள் சொல்கிறார்கள் என்று முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் மியூச்வல் பண்ட் முதலீடுகள் குறித்து சரியான வழிகாட்டுதல்களுடன் செய்தால் நல்ல பலன் உண்டு. ஏனெனில் அவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications