வில்லங்க சான்றிதழ் வில்லங்கம்.. அடுத்தடுத்து மோசடி பத்திரங்கள்.. பதிவுத்துறைக்கு பெயிராவின் கோரிக்கை
சென்னை: மோசடி ஆவணங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இது சம்பந்தமான உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.. அந்த கடிதத்தில், பொதுமக்கள் நலன் கருதி, முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:

"ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் மோசடியாக உரிமையாளருக்கு தெரியாமல் சார் பதிவாளர்களால் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில், தமிழ்நாடு அரசிதழ் வெளியீட்டு எண். 428, நாள். 16.08.2022, அன்று தமிழ்நாடு அரசு சட்ட எண். 41/2022, மூலம் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 22(B), 77(A), 77(B), 81A, 81-B, ஆகிய 5 பிரிவுகளை உட்புகுத்தி திருத்தம் கொண்டு வந்தது.
பதிவுத்துறை: இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடித எண். 24819/சி1/2021, நாள். 14.09.2022, மூலம் மேற்கண்ட சட்டம் 16.08.2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என அனைத்து நிலை பதிவு அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பதிவு சட்டத்தில் புதிதாக கொண்டு வந்துள்ள பிரிவு 77-ஏ, மற்றும் 77-பி ஆகிய பிரிவுகளின்கீழ் ஆள்மாறாட்டம் மூலமும் போலி ஆவணங்கள் மூலமும் பதியப்பட்ட மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அது தொடர்பான மேல்முறையீட்டை பதிவுத் துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
மாவட்ட பதிவாளர்: பல கட்ட விசாரணைக்கு பின் கடந்த 02.08.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட சட்டப் பிரிவுகளில் மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவும், எனவே அதை ரத்து செய்கிறோம் எனவும், மேலும் மேற்கண்ட சட்டப்பிரிவின் கீழ் மாவட்டப் பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு சம்பந்தமாக பதிவுத்துறை தரப்பில் எந்தவித முடிவும் இதுவரை எடுக்கவில்லை என தெரிய வருகிறது. ஆகவே ஏற்கனவே மாவட்ட பதிவாளர்களால் மேற்கண்ட சட்டப் பிரிவுகளின் கீழ் ரத்து செய்யப்பட்டு வில்லங்க சான்றிதழில் குறிப்பிட்டுள்ள வில்லங்க விவரங்களை நீக்க வேண்டும்.
சுற்றறிக்கை: மேலும், அந்த உத்தரவின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள வருவாய் பதிவேடுகளை மீண்டும் முந்தைய உரிமையாளர் பெயரில் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக தாங்கள் சரியான வழிகாட்டி நெறிமுறைகளை, சுற்றறிக்கையாக வெளியிட வேண்டும்" என்று பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி மேற்கண்ட சட்டத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலன் கருதி, வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications