வில்லங்க சான்று.. "இதை" தான் கண்டுபிடிக்க முடியாது.. ஆன்லைனில் ஈஸியாக ஈசி பெறலாம்.. பதிவுத்துறை செம
சென்னை: சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது, வில்லங்க சான்றிதழ் தவிர்க்க முடியாதது.. இந்த வில்லங்க சான்றிதழில் என்ன விவரங்களை அறிந்து கொள்ள முடியும்? என்ன விவரங்களை அறிந்து கொள்ள முடியாது? தெரியுமா?
ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மிகப்பெரிய மோசடியாகும்.. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவுவதுதான் பதிவுத்துறை ஆவணம்.
வில்லங்கம்: வில்லங்கம் என்பது, ஒரு சொத்தினை, பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என்ற பல்வேறு விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.. இதைவைத்து, ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக அறிந்து கொள்ளவும் முடியும்.

பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றிதழை பெறுவார்கள். அதாவது, குறிப்பிட்ட ஒரு சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும்.. சொத்து யாரிடமிருந்தது? யாரிடம் கைமாறி வந்தது? என்ற அனைத்து விவரங்களுமே இடம்பெற்றிருக்கும்.
சான்றிதழ்: அந்த சான்றிதழில், பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட வருடம், மற்றும் பதிவு எண் போன்றவை தெரிந்து கொள்ள முடியும்.
அடமானம்: அதுமட்டுமல்ல, அந்த சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும், அதையும் அறிந்து கொள்ள முடியும்.. சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதி தந்திருந்தாலும், அதையும் வில்லங்க சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால், 2009ம் ஆண்டு நவம்ப மாதம், பவர் ஆஃப் அட்டர்னியைப் பதிவுசெய்யும் முறை அறிமுகமாகிவிட்டது.. எனவே, அதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் வில்லங்க சான்றிதழில் அதை கண்டுபிடிக்க முடியாது.. அதுபோல சொத்து பதிவுசெய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால், அதையும் கண்டுபிடிக்க முடியாது.
தற்போதெல்லாம் வில்லங்க சான்றிதழுக்காக, விண்ணப்பிக்கும்போது, சான்று வழங்க காலதாமதம் ஆகிறது. அதனால், ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழை பெறும் வசதியை பத்திரப்பதிவுத் துறை துவங்கி உள்ளது.
அந்தவகையில், தமிழகப் பதிவுத்துறையின் http://www.tnreginet.net/ என்ற இணையதளத்திற்கு சென்று நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல, வில்லங்க சான்றை பதிவிறக்கம் செய்யவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வில்லங்க சான்றிதழை பார்ப்பதற்கு encumbrance certificate என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிக்கலாம் : நீங்கள் வாங்கும் சொத்து, பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவாளார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தின் மூலமும் வில்லங்கச்சான்றிதழ் பெற முடியும். தமிழக பத்திரபதிவுத்துறையின் இணையத்தின் www.tnreginet.net என்ற தளத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications