சரமாரியாக வந்த புகார்கள்! தமிழகத்தில் மணல் குவாரிகள் தொடர்புடைய 40 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னை: மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாகத் தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இப்போது சென்னை, திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மணல் குவாரி பணமோசடி வழக்கு தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் குவாரிகள்: துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் காலை முதலே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. அதேபோல தொழிலதிபர் திண்டுக்கல் ரத்னம் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுக்க மொத்தம் 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை ரெய்டு நடந்து வருகிறது. புதுக்கோட்டை, சென்னையில் உள்ள ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலதிபர் ரத்தினத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
தமிழ்நாடு முழுக்க சோதனை: திருச்சி கொள்ளிடம் ஆறு, வேலூர் பாலாற்றில் உள்ள மணல் குவாரிகளும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் கொண்டையம்பேட்டையில் அமைந்துள்ள ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் சோதனை நடைபெற்று வருகிறது. சிஆர்பிஎப் அதிகாரிகளின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், திருவானைக்காவல் அருகே உள்ள மணல் குவாரியிலும் சோதனை நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனுர் அருகே உள்ள மணல் சேமிப்பு கிடங்கிலும் அதிகாரிகள் காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் பள்ளிகொண்டே அருகே பாலாற்றில் உள்ள குவாரியிலும் ரெய்டு தொடர்கிறது. மணல் குவாரிகள் மட்டுமின்றி புதுக்கோட்டையில் புனல்குளத்தை சேர்ந்த தொழிலதிபர் சண்முகத்தின் கிராவல் குவாரியிலும் ரெய்டு நடந்து வருகிறது.

கட்டுப்பாடுகள்: பொதுவாக மணல் குவாரிகளில் காலை நேரத்திலேயே மணலை எடுக்க லாரிகள் வந்து வரிசையாக நிற்கும். அதன்படி இன்றும் மணல் குவாரிகளில் லாரிகள் வந்து இருந்தன. இருப்பினும், காலையில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். இதனால் உள்ளே இருந்த லாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல கூடுதலாக எந்தவொரு லாரியும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை.
இந்த ரெய்டு காரணமாக மணல் குவாரிகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. குவாரிகள் இருந்து மணல் எடுத்து அதை விற்பனை செய்வதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை பல மணி நேரமாகத் தொடர்கிறது. இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத் துறை இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. ரெய்டு முடிந்த பிறகே கூடுதல் தகவல்கள் தெரிய வரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications