சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 + 6.. இந்த பக்கம் சசிகலா.. அந்த பக்கம் தினகரன்.. டெல்லிக்கு மீண்டும் பறந்த டிடிவி! எகிறும் பிரஷர்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று ஒரு பக்கம் சசிகலாவிடம் கோடநாடு விசாரணை நடைபெற உள்ள நிலையில் இன்னொரு பக்கம் டிடிவி தினகரனிடன் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.

தொடர் விசாரணைகள் காரணமாக சசிகலா, டிடிவி ஆதரவாளர்கள் மத்தியில் பிரஷரை அதிகரித்துள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலா மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இவரிடம் 6 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 200 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

 அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்... ஆட்சி அமைப்போம் - டிடிவி தினகரன் அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்... ஆட்சி அமைப்போம் - டிடிவி தினகரன்

சசிகலா விசாரணை

சசிகலா விசாரணை

சசிகலாவிடம் சென்னையில் தி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று விசாரணை செய்யப்பட்டது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடந்தது. சசிகலாவிடம் 6 மணி நேரம் அதிகாரிகள் துருவி துருவி கேள்விகளை கேட்டுள்ளனர். இன்னும் 300 கேள்விகள் இந்த வழக்கில் மீதம் உள்ளது. அவை இன்று கேட்கப்படும்.இதற்காக தி நகர் நோக்கி தனிப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய உள்ளது. 2017ல் அதிமுகவில் மோதல் நிலவிய போது இரட்டை இலை சின்னத்தை பெற கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதே புகார். இதற்கு சுகேஷ் சந்திரா என்று இடைத்தரகரிடம் அவர் பணம் கொடுத்ததாகவும் புகார் உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டார் டிடிவி தினகரன்.

விசாரணை

விசாரணை

இதில் விசாரணைக்கு இடைக்கால தடை இருந்தாலும், இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் 12 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணை முடிந்து வெளியே வந்த போது தினகரன்.. நான் நிரபராதி என்று குறிப்பிட்டார்.

Recommended Video

    முக்கியமான கேள்விகள்.. கண்டிப்பாக பேசிய சசிகலா! என்ன நடந்தது?
    மீண்டும் டிடிவி விசாரணை

    மீண்டும் டிடிவி விசாரணை

    தற்போது மீண்டும் தினகரனுக்கு டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இன்று அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் ஆஜராவதற்காக தினகரன் தற்போது டெல்லி சென்றுள்ளார். ஒரு பக்கம் சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை, இன்னொரு பக்கம் தினகரனிடம் 12 மணி நேரம் விசாரணை என்று அடுத்தடுத்து பிரஷர் கொடுக்கப்படுகிறது. இவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் இந்த விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Enforcement Directorate to investigate TTV Dinakaran again today amid Sasikala Kodanadu investigation. இன்று ஒரு பக்கம் சசிகலாவிடம் கோடநாடு விசாரணை, இன்னொரு பக்கம் டிடிவி தினகரனிடன் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X