சிஎம்டிஏ அலுவலகத்தில் இறங்கிய ED அதிகாரிகள்.. லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்தாரா வைத்திலிங்கம்?
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி வரும் அமலாக்கத்துறையினர், சிஎம்டிஏ அலுவலகத்தில், கட்டுமான நிறுவனத்துக்கு திட்ட அனுமதி கொடுத்தது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் வைத்திலிங்கம். அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர், கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுத்தியதாகக் கூறி, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு அருகே இருக்கும் தெலுங்கன் குடிக்காடு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் இல்லத்தில் இன்று காலை 7.30 மணிக்குத் தொடங்கி 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
தஞ்சாவூரில் உள்ள வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவின் இல்லம் மற்றும் சென்னையில் வைத்திலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி அறை மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் நிதி நிறுவன ஊழியர் கோடீஸ்வரி என்பவர் வீட்டிலும், திருவேற்காட்டில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்திலும், ரவிக்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்திலிங்கம் மச்சான் வீட்டு பூட்டை உடைத்த ED அதிகாரிகள்.. ஆள் இல்லாத நிலையில் வீட்டை திறந்து சோதனை!
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிஎம்டிஏ அலுவலகத்தில், ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்துக்கு திட்ட அனுமதி கொடுத்தது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், சி.எம்.டி.ஏ பொறுப்பை வகித்தபோது கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேடாக அனுமதி கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், திட்ட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications