"கொல் = KILL.. தாக்கு = ATTACK" - இங்கிலீஷ் “பிச்சைக்கார” மொழி! தமிழ் இறை மொழி -சீமான் கண்டுபிடிப்பு
"பேச்சு. ஒரு S போட்டு SPEECH. அண்ணன் SPEECH சூப்பர் என்கிறார்கள். ஏன் பேச்சு என்று சொன்னால் என்னப்பா. அதில் S ஐ ஒட்ட வேண்டும் நீ. எங்களுடைய பஞ்சு. அதில் S போட்டு SPONGE."
சென்னை: தமிழில் உள்ள பல வார்த்தைகளை கடன் வாங்கி ஆங்கிலத்தை உருவாக்கியதாகவும், ஆங்கிலம் பிச்சைக்கார மொழி எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற செஞ்சமர் திரைப்பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீமானின் இந்த பேச்சு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆதிரை தமீம் அன்சாரி என்பவர் இயக்கத்தில் சிஜிஎம் பிக்சர்ஸ் - நாச்சியார் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் செஞ்சமர் என்ற படம் உருவாகி இருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய சீமான் ஆங்கிலம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகி உள்ளன.

இறைவனால் பேசப்பட்டது தமிழ்
அதில், "எனக்கு கொடுத்த இந்த அழைப்பதழ் தமிழில் இருந்தது. இந்த தமிழுக்காகவே நாங்கள் 60 ஆயிரம் பேர் போராடி இறந்தோம். ஒருவர் அமர்ந்து உருவாக்கிய மொழி தமிழ் இல்லை. வல்லூசி வைத்து ஒருவரால் உருவாக்கப்பட்டது இந்தி. எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. ஆனால், தமிழ் இறைவனால் பேசப்பட்டது.

தமிழ் வார்த்தைகள் ஆங்கிலத்தில்
மூதாதையர் முருகன், சிவன் பேசிய மொழி தமிழ். இறையனார்தான் எங்கள் சிவன். நீங்கள் பேசும் இங்கிலீஷ் நான் போட்ட பிச்சை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்னுடைய தாய்மொழியில் இருந்து கடன் வாங்கி உருவாக்கப்பட்ட மொழி. என்னுடைய கொல் அவனுடைய KILL. என்னுடைய காசு அவனுடைய CASH. என்னுடைய கலாச்சாரம் அவனுடைய CULTURE. என்னுடைய காசு அவனுடைய CASH.

பிச்சைக்கார மொழி
உடன். உடனே செய். SUDDEN. ஒரு S போட்டு SUDDEN. பேச்சு. ஒரு S போட்டு SPEECH. அண்ணன் SPEECH சூப்பர் என்கிறார்கள். ஏன் பேச்சு என்று சொன்னால் என்னப்பா. அதில் S ஐ ஒட்ட வேண்டும் நீ. எங்களுடைய பஞ்சு. அதில் S போட்டு SPONGE. என்னுடைய தாக்கு. அதில் A போட்டு ATTACK. அதுவே திருட்டுப்பய மொழி, பிச்சைக்கார மொழிய வைத்துக்கொண்டு அலையுறான். அதைபோய் அறிவு என்று எழுதுகிறாய்.

தமிழ் என்றால் புலி
வெள்ளைக்காரன் நன்றாக தமிழ் படித்து விட்டு எங்களுக்கு பாடம் நடத்துகிறான். ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர் தமிழை நன்றாக கற்று தேம்பாவனி என்ற நூலை எழுதி விட்டு சென்றார். கூகுளில் முன்பு தமிழன் என்று எழுதினால் கூலி என்று வரும். இப்போது புலி என்று வரும். உண்மையில் நான் தான் ஃபாரின் ரிட்டன். என்னை படாதபாடு படுத்துவார்கள்.

அனைவரின் வேலை
இது ஒரு படம் அல்ல. படைப்பு. இதை எடுக்க துணிந்த இயக்குனரை பாராட்டுகிறேன். இது என்றுமே ஒருவரின் வேலை. கடமை இல்லை. ஒவ்வொருவரின் வேலை இது." என்று சீமான் பேசினார். தமிழ் குறித்து உயர்வாக சீமான் பேசிய நிலையில் ஆங்கிலத்தை அவர் தரக்குறைவாக பேசியது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications