பெரிய பாதை ஆங்கிலம் போதும்.. சின்ன பாதை ஹிந்தி தேவையில்லை.. அமைச்சர் பொன்முடி சுவாரசிய பேச்சு
சென்னை: "பெரிய ஓட்டை ஆங்கிலம் இருக்கும் போது, சின்ன ஓட்டையான ஹிந்தி எங்களுக்கு தேவையில்லை" என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
மத்தியில் ஆட்சி அமைத்தது முதலாகவே ஹிந்தி மொழியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை பாஜக அரசு செய்து வருகிறது. சமீபகாலமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையிலும் கூட இந்தியை பிரதானமாக கொண்டு வருவதற்கான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு தமிழகம், கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஹிந்தி மொழி அல்லாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மொழி உணர்வு அவசியம்..
அந்த வகையில், சென்னையில் இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், இந்தி மொழி திணிப்பு எதிராக சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது: இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு சமுதாய உணர்வு இருப்பது மிகவும் அவசியம். அதேபோல், மொழி உணர்வும் இருக்க வேண்டியதும் முக்கியம். ஒருகாலத்தில், ஒரு விழாவிலோ அல்லது நிகழ்ச்சியிலோ ஆங்கிலத்தில் பேசினாலே கைத்தட்டுவார்கள். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. செந்தமிழில் பேசுபவர்களுக்கே இன்றைக்கு வரவேற்பு இருக்கிறது. இங்கு கூட தமிழில் பேசியவர்களுக்கே மாணவர்கள் கைத் தட்டினர். இதிலிருந்தே நமது மாணவர்களின் தமிழ் மொழி உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. இதனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

இருமொழிக் கொள்கையே நல்லது..
தமிழ்மொழி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஆங்கிலமும் முக்கியம். ஏனெனில் ஆங்கிலம் சர்வதேச மொழி. மேலை நாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்கும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கும் ஆங்கிலம் அவசியம். ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒன்று தாய்மொழி. மற்றொன்று ஆங்கில மொழி. இவை இரண்டுமே இந்தியர்களுக்கு போதுமானது. இருமொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதுதான் தமிழகத்தின் சிறப்பம்சம்.

பெரிய ஓட்டை - சின்ன ஓட்டை..
ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக, பேரறிஞர் அண்ணா பல முறை இந்த உதாரணத்தை கூறுவார். அரசியலுக்கு அப்பாற்பட்ட உதாரணம் இது. அதாவது, ஒருவர் தனது வீட்டின் சுவற்றில் பெரிய ஓட்டை ஒன்றை போட்டிருந்தார். அதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ஏன் இந்த ஓட்டையை இங்கு போட்டிருக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த வீட்டுக்காரர், வீட்டில் பூனை ஒன்று இருக்கிறது. அது வெளியே செல்ல வசதியாக இந்த ஓட்டையை போட்டுள்ளதாக கூறினார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து, அந்த ஓட்டைக்கு அருகே ஒரு சிறிய ஓட்டை ஒன்றையும் அவர் போட்டிருக்கிறார். இதுகுறித்து கேட்ட போது, வீட்டில் உள்ள எலி செல்வதற்காக இந்த ஓட்டை என உரிமையாளர் கூறியுள்ளார். அதற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர், பூனை செல்லும் பெரிய ஓட்டையில் எலி செல்ல முடியாதா? ஏன் உனக்கு மூளை வேலை சரியில்லையா? எனக் கேட்டுள்ளார்.

சின்ன ஓட்டை இந்தி..
அதுபோல, பெரிய ஓட்டை என்ற ஆங்கிலம் இருக்கும் போது சின்ன ஓட்டை இந்தி எதற்கு.. இது அண்ணா சொன்ன உதாரணம். இந்தியாவில் உள்ள மாநிலங்களாக இருந்தாலும் சரி, சர்வதேச நாடுகள் என்றாலும் சரி, ஆங்கிலத்தை வைத்தே நாம் சமாளித்து விடலாம். அப்படி இருக்கும் போது, சின்ன ஓட்டையான இந்தியை எதற்காக சிலர் திணிக்க முயற்சிக்கின்றனர்? அந்த சின்ன ஓட்டையை புகுத்துவதன் மூலமாக எந்த பிரயோஜனும் இல்லை. இதை மாணவர்கள் நன்கு உணர வேண்டும். இவ்வாறு பொன்முடி பேசினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications