சவுமியா அன்புமணி பேச பேச.. அப்படியே வியந்து பார்த்த ஐ.நா. சபை.. யோசிக்க வைத்த "காலநிலை" உரை.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலநிலை மாற்றம், ஒட்டுமொத்த மனிதகுலத்தையும், வளரும் நாடுகளில் உள்ள பெண்களை பாதிக்கக்கூடிய வகையில் இருப்பதாக பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 57ம் அமர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடந்து வருகிறது. இதன் 37ம் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

sowmiya anbumani

அப்போது, காலநிலை மாற்றம், வேளாண் உற்பத்தி, பாலின சமுத்துவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சவுமியா பேசியிருந்தது, உலக நாடுகளின் கவனத்தை பெற்று வருகிறது. சவுமியா அன்புமணி உரையின் சுருக்கம்தான் இது:

காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும், மிகவும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களை பாதிக்கக்கூடிய, அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலகப் பிரச்சனை. காலநிலை மாற்றம் காரணமாக, உலகம் முழுவதும் பள்ளிகளின் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் தங்களின் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.

பாலின சமத்துவமின்மையும், சுற்றுச்சூழல் சீரழிவும் காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு, குறிப்பாக வேளாண்மை, தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரம், ஊட்டச்சத்து, காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் இடம் பெயருதல் ஆகிய துறைகளில் ஏற்படும் பாதிப்புகளை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கச் செய்கிறது.

பாலின சமத்துவம்: காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் அளவுக்கு அதிகமான பாதிப்புகளுக்கு தீர்வு காண, அவர்களுக்கு கல்வி, சொத்துரிமை, வளங்களை கையாளும் உரிமை, உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் முடிவெடுக்கும் நடைமுறையில் பெண்களை ஈடுபடுத்துதல் போன்றவற்றின் மூலமாக அதிகாரமளிக்க வேண்டியது அவசியமாகிறது.

காரணம், காலநிலை மாற்றம் காரணமாக, உலகம் முழுவதும் பள்ளிகளின் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் வருடந்றும், பல்லாயிரக்கணக்கான மாணவிகள் தங்களின் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.

கழிப்பறைகள்: காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் எண்ணற்ற பாதிப்புகளுக்கு தீர்வு காண, அவர்களுக்கு கல்வி, சொத்துரிமை, வளங்களை கையாளும் உரிமை, உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் முடிவெடுக்கும் நடைமுறையில் பெண்களை ஈடுபடுத்துதல் போன்றவற்றின் மூலமாக அதிகாரமளிக்க வேண்டியது உடனடி அவசியமாகிறது.

காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.. வரலாறு காணாத அளவுக்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்திற்கு மேலை நாடுகள் தான் காரணமாகும். காலநிலை மாற்றத்திற்கு வளரும் நாடுகளும், தீவு நாடுகளும் மிகக்குறைந்த அளவில் தான் காரணமாக இருக்கின்றன.. எனினும், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை அந்தந்த நாடுகளே அதிகமாக எதிர்கொள்கின்றன.

பசுமை இல்ல வாயுக்கள்: எனவே, காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்கவும், அதன் மூலம் காலநிலை நடவடிக்கைகளில் பாலின சமத்துவத்தையும், உலகில் அனைவருக்கும் நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்யவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் சவுமியா. ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் சவுமியாவின் இந்த உரைதான் இணையத்தை அதிர வைத்து கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றம்: சவுமியாவை பொறுத்தவரை, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்.. ஒவ்வொரு வருடமும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அது தொடர்பான விழிப்புணர்வையும் ஊட்டி வருபவர்.. பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தியவர்..

அதுமட்டுமல்ல தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்... இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பலமுறை சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்து வந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+