பாக்யராஜ் வந்தாரு போயிட்டாரு.. டி.ராஜேந்தர் வந்தாரு.. உடனே கார்த்திக் வந்தாரே என்னாச்சு.. மாஜி சுளீர்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகி கொண்டேயிருக்கிறது.. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வராவிட்டாலும், அதுகுறித்த பரபரப்பு மட்டும் இப்போது வரை அடங்கவேயில்லை.
சினிமாவில் அனைவரையும் ஜெயித்த சிவாஜி கணேசன் அரசியலில் தோற்று போய்விட்டார் என்று பரவலாக சொல்வது உண்டு... இதற்கு பிறகு, நடிகர்கள் அரசியலுக்கு வருவது அதிகமாகி விட்டது.
ராமராஜன் தொடங்கி, விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என பலரும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு வந்தனர்.. இவர்களில் விஜயகாந்த் மட்டும்தான், மேலே வந்தார்..

சிவாஜி கணேசன்: அதிமுக, திமுக தரப்பையே ஒருகட்டத்தில் கலங்கடித்தார். விஜயகாந்தை பொறுத்தவரை, ரசிகர் மன்றங்களை கட்சியின் உறுப்பினர் மன்றங்களாக மாற்றினார். 2005 கட்சி தொடங்கிய அவர், ஜனரஞ்சகமான கொள்கைகளை பேசினார். கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தினார். அடுத்தவருடமே தேர்தலை சந்தித்து 10 சதவீத வாக்குகளை பெற்று, எதிர்கட்சியாக தனது பலத்தை நிரூபித்தார். நடிகர்கள் அரசியலில் எப்படி இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கும், எப்படி இருந்தால் தோல்வி என்பதற்கும் விஜயகாந்த் மட்டுமே சாட்சியாக இருக்கிறார்.
விஜயகாந்த்: விஜயகாந்த் போலவே, எம்ஜிஆர் பெயரை சரத்குமார் வந்தாலும், பெருமளவு, அவரது கட்சி கவனம் பெறாமல் உள்ளது.. தனித்து போட்டியிட முடியாத சூழலில், திமுக, அதிமுகவை நம்பித்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமை உள்ளது.. பாக்கியராஜ்ஜூம் இப்படித்தான்.. இவரும் எம்ஜிஆரின் சினிமா வாரிசு என்ற பிம்பத்துடன்தான் அரசியலுக்கு வந்தார். எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதோடு சரி.. பிறகு, கட்சியை திமுகவோடு இணைத்துவிட்டார்..
பல்கலை திறமைசாலி டி.ராஜேந்தர், திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.. பிறகு, அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதோடு சரி.. கமல் கட்சியை துவங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பு இவர்மீது உள்ள நிலையில், தேர்தலில் என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வம் கூடிவருகிறது.. ரஜினி அரசியலுக்கு வராமலேயே ரிடையர் ஆகிவிட்டார்..
நடிகர் கார்த்திக்: நடிகர் கார்த்திக், சாதி அரசியல் பக்கம் சென்றார்.. அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்றார்.. பிரச்சார சமயத்தில் மட்டுமே தேர்தலை தலைகாட்டிய நிலையில், கட்சிக்கான கட்டமைப்பை என்ன செய்தார் என்று தெரியவில்லை.. இப்போது விஜய் அரசியலுக்கு வரப்போவதாக சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுக மாஜி அமைச்சர் சண்முகநாதன் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார். அப்போது விஜய்யின் அரசியல் வந்தால், திராவிட கட்சிகளுக்கு பலவீனமாக இருக்குமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "விஜயகாந்த் வந்தாரு.. அப்படித்தான் எல்லாரும் சொன்னாங்க.. ஆனால், அவர் இருக்கிற இடமே தெரியாமல் இன்னைக்கு போய்ட்டாரு.. கமல்ஹாசன் இருக்கிற இடமே தெரியாம போய்விட்டார்.. சரத்குமார் வந்தாரு.. போயிட்டாரு.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனே வந்தாரு.. எல்லாருமே எம்ஜிஆர் ஆகிவிட முடியாது... எல்லாருமே அதிமுக மாதிரி உருவாகிட முடியாது.. இதான் உண்மை..
விஜய் அரசியல்: விஜய்க்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது.. படம் ஓடுகிறது.. கணக்கில் வராத கோடிக்கணக்கான இருக்கு அப்படிங்கிற தைரியத்தில் முதல்வராகிவிடலாம் என்றால் முடியாது.. எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.. எம்ஜிஆர் வளர்த்த கட்சியில் மாதிரி இருக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மாஜி. இந்த கருத்துக்கு, அந்தந்த கட்சி தலைவர்களின் தொண்டர்கள் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
