ரூ.525 கோடி + 8 லட்சம் சதுரஅடி.. சென்னை ஈசிஆரில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி
சென்னை: சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் 8 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் பிரமாண்டமாக கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணி என்பது தொடங்க உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஸ்டாலின் உள்ளார். இவர் தனது தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நூலகம் கட்டி வருகிறார். அதேபோல் அரசின் நலத்திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டி வருகிறார்.

அந்த வகையில் சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் கருணாநிதி நினைவாக கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 8 ஆயிரம் சதுரஅடி பரப்பில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் இந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஈசிஆரில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி என்பது கட்டாயம் வேண்டும். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மற்றும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் தான் ஈசிஆர் முட்டுக்காடுவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது. ஆனால் இன்னும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் என்பது அனுமதி வழங்கவில்லை. இந்த அனுமதி கிடைத்தவுடன் ஈசிஆரில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டும் பணி என்பது தொடங்கப்படும்.
இந்த அரங்கம் என்பது சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. அதோடு 5 ஆயிரம் இருக்கைகளுடன் மாநாட்டு கூடம், 10 ஆயிரம் பேர் கூடும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைய உள்ளது. அதோடு உணவு விடுதிகள் திறந்த வெளி அரங்கம், 10,000 வாகனங்களை நிறுத்தும் இடம், சாலை வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications