பிஎப் பணம்.. விழுப்புரம் நகராட்சியை உலுக்கிய பிஎஃப் தொகை..இப்படியும் நடக்குமா? யாரிந்த அதிமுக புள்ளி
சென்னை: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் என்ன நடந்தது? யாரிந்த அதிமுக பிரமுகர்? அளவுக்கு அதிகமான பணத்தை பார்த்ததுமே, சபலத்தில் விழுந்த அதிமுக பிரமுகரை, தற்போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.. என்ன நடந்தது?
இபிஎப் (EPF) எனப்படும் பிஎஃப் என்பது பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட அளவு தொகையாகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது எல்லா அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இருக்கக்கூடிய நடைமுறையாகும.

பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு, 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும்.. அந்த ஊழியர்கள் தன்னுடைய பணியில் நீடித்திருக்கும்வரை, இந்த பிஎப் கணக்கும் செயல்பாட்டில் இருக்கும்.. ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுமே, இந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
மோசடிகள்: ஆனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் சில மாதங்களாக எந்த பங்களிப்பும் செய்யப்படவில்லை என்று உங்களுக்கு தெரியவந்தால், உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலில் புகார் கொடுக்க வேண்டும்... அப்படி புகார் தராவிட்டால, உங்களுடைய பிஎஃப் பணம் கிடைக்காமல் போகும்... உரிய தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யாமல், சில நிறுவனம் ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் PF கணக்கில் பங்களிப்பு தொகை வரவு வைக்கப்படாமல் இருந்தாலும் புகார் செய்யலாம். அதேபோல, பிஎப் பங்களிப்புத் தொகை ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டாலும், நிறுவனம் அந்த பணத்தை உங்களது பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றாலோ, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு (EPFO) சென்று புகார் தெரிவிக்கலாம்.
புகார்கள்: EPFIGMS போர்ட்டலில் https://epfigms.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் புகார் தரலாம்.. அல்லது PF அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரலாம்.. EPFO வெப்சைட்டில் உங்களுடைய புகாரைப் பதிவு செய்ய, பிஎப் வைப்புத்தொகை கழிக்கப்பட்டதற்கான ஆதாரம், ஊழியர்களின் சம்பள ரசீது , இபிஎப் உள்ளிட்ட விவரங்களையும் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.
பிஎப் பணத்தில் எந்த மோசடியும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், இத்தனை வழிமுறைகளையும் அரசு செய்து வருகிறது.. ஆனாலும், மோசடிகள் ஆங்காங்கே நடந்து விடுகின்றன.. இப்போதுகூட, விழுப்புரம் நகராட்சியில் ஒரு மோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சி: விழுப்புரம் நகராட்சியில், அதிகாரிகள், தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகையானது, கருவூலத்தில் செலுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் சமீபத்தில் தொழிலாளி ஒருவர், தன்னுடைய பிஎப் பணத்தை எடுக்க சென்றபோது, அங்கு பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதேபோல, கருவூல அதிகாரிகளும் தொழிலாளர்களின் சேமநலநிதி செலுத்தவில்லை என்று தணிக்கை துறையினருக்கு தகவல் தந்துள்ளனர்.
இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளின் அதிரடி விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், வினித் என்பவரது பெயர் அடிபட்டது..
அதிமுக பிரமுகர்: அதாவது கடந்த 2021ல், விழுப்புரம் நகராட்சியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.. இவருக்கு, அதே அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரின் தத்து மகன் வினித் என்பவர் உதவியாக இருந்துள்ளார்.. அதிமுகவில் இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறாராம் வினித்.
அப்போது நகராட்சியிலிருந்து கருவூலத்திற்கு கொண்டு செல்லும், வரவு செலவு கணக்கு விவரங்களை வினித் தான் நேரடியாக பார்த்து வந்துள்ளார்.. அப்போதுதான, அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு செலுத்தப்படும் பிஎப் பணத்தை கண்டு வினித்துக்கு சபலம் வந்துள்ளது.. எனவே, கருவூலத்திற்கு செலுத்தாமல், மொத்த பணத்தையும் வினித் சுருட்டியது தெரியவந்தது.. கிட்டத்தட்ட ரூ.12 கோடி வரை தொழிலாளர்களின் பிஎப் பணத்தை அபேஸ் செய்துள்ளாராம் வினித்..
சுற்றிவளைப்பு: இதையடுத்து, நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததையடுத்து, கோடிகளை சுருட்டிய வினித்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.. அவரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.. அதேபோல, இந்த முறைகேடுகளுக்கு நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும், கருவூல ஊழியர்களும் யாராவது உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications