பிஎஃப் பணம்.. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை., 10 மாவட்டங்களுக்கு 28ம் தேதி குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைப்பு நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் குறைதீர்க்கும் முகாமினை நடத்தி வருகிறது. அந்தவகையில், வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை குறைதீர்க்கும் முகாம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 10 இடங்களில் நடைபெற உள்ளது.

வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 எம்.எச்.வார்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "'வைப்பு நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் குறைதீர்க்கும் முகாமினை நடத்தி வருகிறது. அந்தவகையில், வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை குறைதீர்க்கும் முகாம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 10 இடங்களில் நடைபெற உள்ளது.

EPFO PF money Good news for 10 districts including Chennai Vellore Tiruvannamalai on 28th

சென்னை மாவட்டத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது மகளிர் கல்லூரியிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் வெள்ளானூரில் உள்ள செலிபிரிட்டி பேஷன்ஸ் நிறுவனத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மகாலிலும் முகாம் நடக்கிறது.

அதேபோல் இந்த முகாம்களில் நிறுவன முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை அதிகாரிகள் விளக்குவார்கள்.. தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றியும் இபிஎப்ஓ அதிகாரிகள் விளக்குவார்கள். மேலும் இபிஎப்ஷ விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நடைபெறும். மேலும் வைப்பு நிதி அலுவலகத்தின் புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் பிஎஃப் கணக்கு வைத்துள்ள உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்யப்படும்.. ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளும் உடனே மேற்கொள்ளப்படும். ஃபிஎப் பணம் தொடர்பான புகார்கள் குறித்து குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் நிதி ஆப்கே நிகத் (வைப்பு நிதி உங்கள் அருகில்) என்ற தலைப்பில் குறைதீர்வு முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் காந்திநகர், ராஜீவ்காந்தி மெமொரியல் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இனாம்காரியந்தல் மல்லிகை நகர் ஆயுஷ் ஆயுர்வேத மையத்திலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிருஷ்ணாவரம் வித்யா பீடம் சீனியர் செகண்டரி பள்ளியிலும், திருப்பத்தூரில் ஏலகிரி மலை ஆதனவூர் புனிதசார்லஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

இதில் நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் குறித்து விளக்குதல், புதிய முயற்சி சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படும் என இந்த தகவலை வேலூர் உதவி வைப்பு நிதி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+