"அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இருக்கு".. சவுக்கு சங்கருக்கு சப்போர்ட்டாக வரிந்துகட்டி இறங்கிய எடப்பாடி!
சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் சிலர் புகுந்து பொருட்களை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சவுக்கு சங்கருக்காக வரிந்து கட்டி வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டியது கீழ்த்தரமான செயல் மற்றும் கண்டனத்திற்குரியது.

சவுக்கு சங்கருக்கு ஆதரவாக எடப்பாடி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் தி.மு.கவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.
இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அ.தி.மு.க பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் வீடு சூறை
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இன்று காலை 50 பேர் கொண்ட கும்பல், துப்புரவு தொழிலாளர்கள் போல் வந்து தாக்குதல் நடத்தியதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், சாப்பிடும் டேபிளில் சாக்கடை கழிவுகளை கொட்டியதாகவும் தனது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட பதிவில், "எனது தாயார் இருந்தபோது வீட்டிற்குள் தூய்மை பணியாளர்கள் என கூறி சிலர் புகுந்துள்ளனர். அவர்கள் எனது தாயை தாக்கியதுடன், அவரிடம் இருந்த செல்போனை பறித்துள்ளனர். தற்போது வரை தாக்குதல் நடத்தப்படுகிறது. காவல் துறை என்னை வீட்டுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.
என்ன பின்னணி?
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் துப்புரவு தொழிலாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி உடன் 230 கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தை வழங்கினார். இதில் 87 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள், மீதமுள்ள அத்தனை பேரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் பினாமிகள். வாகனங்களை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தரும் பணத்தை தனியார் கம்பெனியில் முதலீடு செய்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் கொடுத்துவிட்டு மீத பணத்தை செல்வப்பெருந்தகை எடுத்துக் கொள்கிறார் என நான் குற்றம்சாட்டி இருந்தேன். இது தொடர்பான ஆதாரங்களை நான் காணொலியில் காண்பித்து இருந்தேன்.
செல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். அருண் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த வீட்டின் முகவரி யாருக்குமே தெரியாது. மதுரவாயிலில் உள்ள எனது சொந்த வீடு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டுக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை காவல்துறை உள்ளிட்ட யாருக்கும் கொடுத்ததே கிடையாது. காவல்துறை என் வீட்டின் முகவரியை அளித்து தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தி உள்ளனர்." எனக் குற்றம்சாட்டினார் சவுக்கு சங்கர்.
-
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications