அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்!
சென்னை: "என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று இரவு அல்லது நாளைக்குள் உடன்பாடு கையெழுத்து ஆகும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு நேற்று (மார்ச் 23) அதிமுக தலைமை அலுவலகத்தில் இறுதி செய்யப்பட்டது. இநத நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை. இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு - 27 தொகுதிகள், பாமகவுக்கு - 18 தொகுதிகள், அமமுகவுக்கு - 11 தொகுதிகள், ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக, பாமக, அமமுகவுக்கு மொத்தமாக 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் சில கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இதன் முடிவில் அந்த விவரங்களை தெரிவிப்போம்" என்றார். அதிமுக கூட்டணியில் இன்னும் ஜி.கே.வாசனின் தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக, புரட்சி பாரதம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் தமாகா 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலை போல 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கேட்டிருந்தார். அதனால், அவரது கட்சிக்கு தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. குறைவான தொகுதிகளையே ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் ஜி.கே.வாசன் அதிருப்தி காரணமாக நேற்று தொகுதி பங்கீட்டு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் தமாகாவின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. நேற்று இரவு நான் சென்னையில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்தேன். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் தமாகாவின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது". எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று இரவு அல்லது நாளைக்குள் உடன்பாடு கையெழுத்து ஆகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், இருபது நாட்களாக திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வார்த்தை போர் நடந்தது. அப்போது எல்லாம் பத்திரிகையாளர்கள் விவாதம் நடத்தவில்லையே . எங்களுக்கு எப்படியாவது பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று பார்க்கிறார்கள் ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் . எங்களுடைய கூட்டணியைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம் -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
கரூரை விடக்கூடாது.. திமுகவில் களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நிழல்.. யாரு? அதிமுகவிற்கு தலைவலி -
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications