அதிமுக - பாமக இயற்கையான கூட்டணி.. இன்னும் பல கட்சிகள் எங்களுடன் இணையும்.. எடப்பாடி பழனிசாமி!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இருந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று பேசி வந்தார். இதனால் பாமகவுடன் விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப பாமக தலைவர் அன்புமணி தொடர்ச்சியாக திமுகவை சாடி வந்தார்.

இந்த நிலையில் இன்று பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அன்புமணி வந்தார். அவருடன் சத்யபாமா உள்ளிட்ட பாமக நிர்வாகிகளும் வந்தனர். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் வரை அன்புமணி ஆலோசனை நடத்தினார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது. எங்களின் கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற லட்சியத்துடன், வலிமையான தமிழகத்தை உருவாக்க எங்களின் கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக - பாமக - பாஜக கூட்டணியில் உள்ள அனைவரும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக பணியாற்றுவோம். தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதனை பின்னர் அறிவிப்போம் என்று தெரிவிவித்துள்ளார். தொடர்ந்து அன்புமணி பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். வலுவாக கூட்டணியாக அமைந்துள்ளது.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட போது, மக்கள் திமுக மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறி புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications