கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆட்சி மாற்றம் உறுதி... இப்பவே அலைன் ஆகிக்கோங்க!" என்று இப்பவே அதிகார வர்க்கத்தின் காதுகளில் பேசிக்கொண்டு இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதாவது பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தன் பக்கம் இழுக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம் எடப்பாடி.

tamil nadu assembly elections 2026 M K Stalin

சேலம் ரூட்... செட்டில்மென்ட் பிளான்!

அடுத்து "நம்ம ஆட்சிதான் வரப்போகுது. வர்றவங்களுக்கெல்லாம் வெயிட்டான போஸ்டிங் வெயிட்டிங்" - இதுதான் சமீபகாலமாக சில முக்கிய அதிகாரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பில் இருந்து பறக்கும் தூது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, தற்போது பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் சில 'பவர்ஃபுல்' ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசி வருகிறதாம்.

அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, இப்போது தங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலகத்திலும், முக்கிய மாவட்டங்களிலும் 'ராஜ மரியாதை' கிடைக்கும் என்பதுதான் இபிஎஸ்-ஸின் பிரதான ஆஃபர். குறிப்பாக, தற்போதைய தி.மு.க அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் சில அதிகாரிகளை 'பிக்' செய்து, அவர்களைத் தன் பக்கம் இழுக்க எடப்பாடி காய் நகர்த்தி வருகிறார்.

'வெயிட்டிங் லிஸ்ட்' அதிகாரிகள்... எடப்பாடியின் கணக்கு!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்காக இருந்து, இப்போது தி.மு.க ஆட்சியில் 'டம்மி' பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை எடப்பாடி குறிவைக்கிறார். "இன்னும் சில மாதங்கள்தான்... கோட்டையில் கொடி மாறும், அப்போது நீங்கள்தான் ராஜா" என இபிஎஸ் தரப்பு லூர் (Luring) செய்வதாகத் தகவல்கள் கசிகின்றன.

மௌனம் காக்கும் அதிகாரிகள்... முட்டுக்கட்டை போடும் தி.மு.க!

ஆனால், எடப்பாடியின் இந்த 'ஆஃபர்'களுக்கு அதிகாரிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். அதற்கு முக்கியக் காரணம், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட்டுகள். 90 சதவிகிதம்.. அதெல்லாம் வேண்டாம் சார்.. நாங்க இப்படியே இருக்கிறோம். இப்போ ரிஸ்க் எடுக்க முடியாது என்று கூறுகிறார்களாம்.

தி.மு.க-வின் பிடி: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அதிகாரிகளை மிகக் கவனமாகக் கையாண்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் செல்வாக்குத் திட்டங்களால் மீண்டும் தி.மு.க-வே ஆட்சிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகப் பல அதிகாரிகள் நம்புகிறார்களாம்.

அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல்: அ.தி.மு.க இன்னும் முழுமையான பலத்துடன் இல்லை என்பதும், ஓ.பி.எஸ் - டி.டி.வி எனப் பிரிந்து கிடக்கும் ஓட்டுகளும் அதிகாரிகளைத் தயங்க வைக்கின்றன.

ரிஸ்க் எடுக்கத் தயக்கம்: "இப்போதே அ.தி.மு.க பக்கம் சாய்ந்தால், ஆளுங்கட்சியின் 'கண்'பட்டுவிடும். தேவையில்லாமல் எதற்கு வம்பு?" என்று பல சீனியர் அதிகாரிகள் எடப்பாடியின் அழைப்பைத் தவிர்த்து வருகிறார்களாம்.

"தி.மு.க-வின் செல்வாக்கு குறையவில்லை என நினைக்கும் அதிகாரிகள், எடப்பாடியின் ஆஃபரை அப்படியே ஹோல்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால், எடப்பாடியோ விடாமல் துரத்துகிறார். 'யார் பக்கம் போனால் சீட் உறுதி?' என அதிகார வர்க்கமே ஒரு மௌன யுத்தத்தில் இருக்கிறது" என்கிறது கழுகார் தரப்பு.

அதிகாரிகளை வளைப்பதன் மூலம் கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் எடப்பாடியின் பிளான் ஒர்க்-அவுட் ஆகுமா அல்லது அதிகாரிகள் தி.மு.க-வின் பக்கமே நிலைத்து நிற்பார்களா? காலம்தான் பதில் சொல்லும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+