வாங்க மோதிப் பார்த்துக்கலாம்! ஓபிஎஸ்ஸை வம்பிழுக்கும் இபிஎஸ் & கோ! ஆனா ‘அது’ மட்டும் முடியாதே!
சென்னை : நான்கு மாதத்தில் பொதுக்குழு நடத்தலாம் என்று கூறியுள்ளார்கள். தொண்டர்கள் மக்கள் ஆதரவு இருந்தால் ஜெயித்து வாருங்கள். அதை விட்டு நான் தான் அதிமுக நான் தான் தலைவர் என்று கூற வேண்டாம் நாங்கள் தேர்ந்தெடுத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு கடும் கோபம் அடைந்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் பெரும் புயலாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், கட்சி பொதுச் செயலர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில் அவரது தரப்பினர் உறுதியாக இருந்த நிலையில் அதற்கு சாதகமான நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதிமுகவை பொறுத்தவரை தற்போது நீதிமன்ற வழக்குகள் காரணமாக மாறி மாறி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு கிடைத்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இறுதியாக எண்ண தீர்ப்பு வருகிறது அதுதான் உறுதியான தீர்ப்பாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

எடப்பாடி பழனிசாமி
இப்படி மாறி மாறி அரசியல் கிளைமேட் மாறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். காரணம் கட்சியில் ஏற்கனவே சொன்னபடி கட்சியில் 99 சதவித தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் கட்சி அமைப்பு ரீதியாக அவர் தான் மிக வலுவான நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக என்ன செய்தாலும் அவரை அதிமுகவில் அசைக்க முடியாது.

ஒ.பன்னீர்செல்வம்
அதே நேரத்தில் ஒ.பன்னீர்செல்வம் தர்ப்புக்கு கட்சி ஆதரவு இல்லையெனினும், அவர் வகித்து வந்த பதவிகள் தான் அவருக்கு ஒரே சப்போர்ட்டாக இருக்கிறது. இதனை வைத்து தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என சட்டபோராட்டங்களை மேற்கொள்ள முடியும் ஆனால் கட்சியில் அவரதுநிலை கேள்விக்குரியாகவே உள்ளது. இப்படி தலைவர்கள் இருவருக்கான மோதலால் நிர்வாகிகள் இரண்டாக பிளவு பட்டுக் கிடக்க தொண்டர்கள் நிலை தான் பரிதாபகரமாக உள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன்
இந்நிலை தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன்,"நான்கு மாதத்தில் பொதுக்குழு நடத்தலாம் என்று கூறியுள்ளார்கள் தொண்டர்கள் மக்கள் ஆதரவு இருந்தால் ஜெயித்து வாருங்கள் அதை விட்டு நான் தான் அதிமுக நான் தான் தலைவர் என்று கூற வேண்டாம் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என ஆவேசமாக பேசினார். இதற்கு காரணம் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார்.

ஓபிஎஸ் அணியினர்
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு, ஓபிஎஸ் அணியினரை உசுப்பேற்றும் வகையில் உள்ள நிலையில், அவர்கள் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்ததோடு பொதுச் செயலாளர் தேர்தலிலும் போட்டியிட முடியாதபடி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் தற்போது அண்ணா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் திமுகவை விட ஓ.பன்னீர்செல்வம் தரப்பை விமர்சிப்பதிலேயே முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஆர்வம் காட்டி வருவது ஓபிஎஸ் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் பின்னர் பாருங்கள் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
திடீரென எகிறிய கிரேஸ்.. வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அதிமுக? லிஸ்டை கவனிச்சீங்களா? -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்! -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம்












Click it and Unblock the Notifications