செங்கோட்டையன் தொகுதியில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டம்.. நேரடியாக களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் நவம்பர் 30ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டு தொடக்கம் முதலே எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்லாமல் தவிர்த்து வந்த செங்கோட்டையன், திடீரென அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கலகக்குரல் எழுப்பினார்.

இதையடுத்து செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பதவிகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதன்பின் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய செங்கோட்டையன், சசிகலாவையும் சந்தித்தார். இதன்பின் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த விவகாரத்திற்கு பின் டெல்லி சென்ற செங்கோட்டையன், பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்துவிட்டு வந்து மேஜிக் நடக்கும் என்று காத்திருக்கிறார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபிசெட்டிபாளையத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் பலரும் தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பினர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் நவம்பர் 30ஆம் தேதி அதிமுக தரப்பில் பொதுக்கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். ஏற்கனவே ஜூலை 7ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
சுமார் 174 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்ட நிலையில், மீண்டும் நவம்பர் 30ஆம் தேதி முதல் இந்தப் பயணத்தை தொடங்க உள்ளார். அதனை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தொடங்குவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பற்றி பேசுவாரா என்ற ஆர்வமும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு! பார் நாகராஜை எனக்கு தெரியாது! அவரை தவெகவில் சேர்க்கவில்லை - செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications