Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம ஊதியம்.. ஒற்றைக்கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.. இடைநிலை ஆசிரியர்கள் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து, உண்ணாவிரதம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். ஒற்றைக்கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Equal Work to Equal Pay: Thousands of Teachers Hunger strike Contiunes at DPI, Chennai

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கடந்த 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.

இதுதொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த28-ம் தேதி சென்னை பழைய டிபிஐவளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அன்று இரவு கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி கடந்த 28.09.2023 முதல் தொடர்ந்து 5வது நாளாக அஹிம்சை வழியிலான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சென்னை DPI ல் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால், கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

உண்ணாவிரதம் குறித்து ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், 3ஆம் கட்டமாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்தார். இதில் எஸ்எஸ்டிஏ சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும், கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தாக ஜெ.ராபர்ட் கூறினார். அதேசமயம், 'ஏற்கெனவே பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தமுறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை. தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்,' என்றும் ராபர்ட் தெரிவித்தார்.

Equal Work to Equal Pay: Thousands of Teachers Hunger strike Contiunes at DPI, Chennai

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி 14 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.அதிமுக ஆட்சியில் நாங்கள் போராடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் ராபர்ட் கூறியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்தில் ஆசிரியர்கள் பந்தல்களை அமைத்து, இரவு பகலாக குழந்தைகளுடன் தங்கியுள்ளனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேவேளையில் 22 ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் டிபிஐ வளாகத்தில், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள், பணி முன்னுரிமை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 'டெட்' ஆசிரியர்களுக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகியோரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தொடக்க கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சங்க நிர்வாகிகளை நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் அவரது அலுவலகத்துக்கு சென்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரைபோராட்டத்தை கைவிட மாட்டோம் என நிர்வாகிகள் உறுதியாக கூறியதால் அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக இயக்குநர் உறுதியளித்தார். இதுவரை இந்த போராட்டத்தில் 217 ஆசிரியர்களுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பி வருகின்றனர்.

ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த ஒற்றை கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் உள்ள ஆசிரியர்களும் களத்தில் இல்லாமல் சூழ்நிலையால் வர முடியாத ஆசிரியர்களும் முழுவதுமான ஆதரவை அளிக்க வேண்டும் என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இடைநிலை இனம் அழிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்த எம்மின தோழமை மூத்த ஆசிரியர் சங்கங்களும், இன உணர்வோடுள்ள ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் எனவும் ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+